பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

flow, blood

468

fluorocarbon


flow, blood : குருதியோட்டம்.

flow, menstrual : மாதப்போக்கு மாதவிடாய்.

flowmeter : ஒழுகியக்க மானி : வாயுவின் அல்லது திரவத்தின் ஒட்டத்தை அளவிடும் மானி.

Floxapen : ஃபுளோக்சாப்பென் : ஃபுளுக்லோக்சாசிலின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

fluctuation : கழலை அலைபாடு; ததும்பல்; அலைவு அமிழ்வு : சீழ்க்கட்டியிலுள்ள திரவம் அலைபடுதல்.

fludrocortisone : ஃபுளூட்ரோ கார்ட்டிசான் : சோடியத்தை இருத்திவைத்துக் கொள்வதில் உடலில் கார்ட்டிசாலைப் போல் 125 மடங்கு தீவிரமானது. இதனால், வர வரத் தளர்ச்சி யூட்டி, குருதிச் சோர்வுடன் மேனியில் ஊதாநிறம் படர்விக்கும் 'அடிசன்' நோய்க்குப் பயன்படுத்தப் படுகிறது.

flufenamic acid : ஃபுளூஃபெனாமிக் அமிலம் : வீக்கத்தை நீக்கக் கூடிய நோவகற்றும் மருந்து. எலும்புத் தசைப் பகுதிகளுக்குப் பயனுடையது. கீல்வாதத்திற்கு ஏற்புடையது.

fluid : பாய்மம்; நீரம்.

fluid, cerebrospinal : மூளை நீர் :

fluid intraceular : விழியுன்னீர்.

fluid seminal : விந்து நீர்.

fluke : ஈரல் கொக்கிப்புழு; தட்டைப் புழு : ஈரலில் காணப்படும் நங்கூரக் கொக்கி போன்ற ஒட்டுண்ணிப் புழு.

fluorescence : ஒளிர்மை; பன்னிறப் பகட்டொளி : இருளில் அல்லது மின்காந்த அலையதிர்வில் வண்ண ஒளிகாலும் பண்பு.

fluorescein : ஃப்ளூவோரெசின்; ஒளிர்மை : ஒரு பச்சை நிறமான, இருளில் ஒளிர்கின்ற கரைசலாக அமையும் ஒரு சிவப்புப் பொருள். விழிவெண்படலத்தில் ஏற்படும் நைவுப் புண்களைக் கண்டறிய கண் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

fluoride : புளோரைட் : கனிப்பொருள் வகையின் கலவைகளில் ஒன்று, சிலசமயம் குடிநீரில் அயம் கலந்திருக்கிறது. இந்த அயம் எலும்பின் கட்டமைப்புடன் ஒருங்கிணைந்து விட்டால், பல் சொத்தைக்கு எதிராகப் பாதுகாப்பு ஏற்படுகிறது. இந்த அயம் அளவு அதிகமாகிவிட்டால், பல் கோளாறு உண்டாகிறது. இதைத் தடுக்கக் குடிநீரில் ஃபுளோரைட் சேர்க்கப்படுகிறது.

fluorocarbon : ஃபுளுரோகார்பன் : ஒருவகை ஹைடிரோ கார்பன். இதில் சில ஹைடிரஜன் அணுக்களுக்குப் பதிலாக ஃபுளோரின் அமைந்திருக்கும்.