பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

acasia concinna

46

acclimatization to altitude


acasia concinna : சீயக்காய்.

acotalepsia : புரிதல் குறை; நோய்க்குறி அறியாமை.

acatamathesia : புரிதல் குறை: புரிந்துகொள்ளும் தன்மை குறைவாக இருப்பது.

acataphasia : வெளியாக்கக் குறை; வெளிப்படுத்தல் குறை.

acathesia : இயல்பாக உட்கார இயலாமை : பதற்றத்துடனும் மனஅமைதி இல்லாமலும் உட்கார்ந்திருத்தல். குறிப்பாக பீனோதயசின் மருந்து வகையைப் பயன்படுத்துவோருக்கு இந்த நிலைமை ஏற்படும்.

acathexia : இயல்பிலா உடற் சுரப்புகள்.

acathexis : இயல்பான நினைவுணர்வு; முகமலர்ச்சியில்லா மனநோய்.

accelerant : முடுக்கிக் கருவி.

acceleration : விரைவுபடுத்தல்; முடுக்கம் : (1) ஒரு செயலின் வேகத்தை அதிகரித்தல். (2) தரப்பட்டுள்ள கால அளவுக்குள் திசை வேகத்தை அதிகப்படுத்தல். (3) வேகத் தலை விபத்து: வேகமாகச் செல்லும் போது தலையில் அடிபடுதல்.

accelerator : ஊக்கி; முடுக்கி; முடுக்குப்பொறி : வேகத்தை துரிப்படுத்தும் ஒரு பொறி.

acceptance : ஏற்பு; ஏற்றல்.

acceptor : ஏற்பி; வாங்கி : ஒரு பொருளிலிருந்து வேதிப்பொருளை எடுத்துக் கொள்ளும் மற்றொரு பொருள்.

accessory : கூடுதல்; துணைப் பொருள்; துணைக்கருவி; உபரி; மிகை; கூடுதல் அணு : இரத்த விழுங்கணுக்களில் ஒரு வகை. உடற்காப்பு ஊக்கிகளோடு இணைந்து நோய்த் தடுப்பாற்றலை ஊக்குவிக்க உதவும் அனுவகை.

துணை நரம்பு : பதினோறாவது கபால நரம்பு.

துணை மார்புக் காம்பு : மார்பில் கூடுதலாக உள்ள மார்புக் காம்பு

accessory artery : துணைத் தமனி.

accessory auricle : துணை இதய ஊற்றறை.

accessory genital organs : துணை இனப்பெருக்க உறுப்புகள்.

accessory muscle : மூச்சுத் துணைத் தசை.

accessory nerve : துணை நரம்பு.

accetabulum : தொடையெலும்பு பந்து கிண்ண மூட்டு.

accidentalism : குறிமுறை மருத்துவம்; நோய்க்குறி மருத்துவம்.

acclimatization to altitude : உயரச் சூழல் இணக்கம்.