பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

focal nephritis

470

fomentation


முடிச்சுகளின் புறப்பரப்புப் பகுதிகளின் கூறுகள் படிகப்பரப்பாகுதல். இது சிறுநீரக வீக்க நோய் தொடர்புடையது.

focus : நோய் முளை; குவி மையம் : 1. கதிர்கள் குவிகிற அல்லது பிரிகிற இடம். 2. நோய், பாதிக்கும் மிகச்சிறிய பகுதி. 3. நைவுப்புண்ணின் கண்ணுக்குப் புலனாகும் சிறிய பட்டை.

focus, primary : முதன் முளை.

foetal : கருசார்.

foetid : தீ நாற்றம்.

foetus : முதிர் கரு : தாயின் கருப்பையில் (பிறக்கும்முன்) இருக்கும் முதிர்கரு சிசு.

foļd : மடிப்பு.

follow-up : தொடர் காணல்.

foment : ஒத்தடம்.

fomites : நோய் கலன்.

fluxion : குருதிக் கழிச்சல்.

folic acid : ஃபோலிக் அமிலம் : வைட்டமின் தொகுதிகளில் ஒன்று, பசுங்காய் கறிகள், நொதி (ஈஸ்ட்) ஈரல் ஆகியவற்றில் நிறைந்துள்ளது. இது சிறு குடலிலிருந்து ஈர்த்துக் கொள்ளப்படுகிறது. வைட்டமின் B, குறைபாட்டினால் உண்டாகும் குருதிச் சோகையைக் குணப்படுத்தக் கொடுக்கப்படுகிறது.

Folicin : ஃபோலிசின் : இரத்த சோகை நோயைக் குணப்படுத்தக் கொடுக்கப்படும் ஃபோலிக் அமிலத்தின் வணிகப்பெயர். முக்கியமாக கருவுற்றிருக்கும் காலத்தில் ஏற்படும் சோகையைத் தடுக்க இது பயன்படுத்தப் படுகிறது.

follicle : குமிழ்ச்சுரப்பி; சுரப்பி திசு நுண்குமிழ்; சிறுபை : ஒரு சிறிய சுரபபுபடை.

folliculitis : குமிழ் சுரப்பி வீக்கம் : மயிர் மூட்டுப்பை போன்ற குழாய்ச் சுரப்பிகளில் ஏற்படும் வீக்கம்.

fomentation : ஒத்தடமளிப்பு; ஒத்தடம் கொடுத்தல் : மருந்திட்ட இளஞ்சூடான கழுவுநீரினால் ஒத்தடம் கொடுத்தல்.