பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fontanelle

471

forced expiratory time


fontanelle : உச்சிமையம்; உச்சிக் குழி; உச்சி மடு : குழந்தையின் தலையில் எலும்பு வளராது மென்தோல் மட்டும் உடைய உச்சி மையம் இது பெரும்பாலும் குழந்தையின் இரண்டாம் வயதில் மூடிக் கொள்ளும்.

உச்சி மையம்

food : உணவு.

food allergy : உணவு ஒவ்வாமை : உணவு உண்டதும் ஏற்படும் எதிர்விளைவுகள் அனைத்தையும் இது குறிக்கிறது.

food,artificial : செயற்கையுணவு.

food,protective : காப்புணவு.

food intolerance : உணவு வெறுப்பு : உணவு மீது வெறுப்பு உண்டாதல். உணவிலுள்ள காஃபின், தைராமின் போன்ற தீவிரப் பொருள்களின் காரணமாக, அல்லது லேக்டோஸ் போன்ற செரிமானப் பொருள்கள் குறைபாடு காரணமாக, அல்லது ஒவ்வாமை காரணமாக அரிதாக ஏற்படும் உணவு வெறுப்பு நோய்.

food poisoning : உணவு நச்சூட்டம்; நச்சுணவு : பாக்டீரியா நச்சு, நச்சுடைய இயற்கைக் காய்கறிகள் போன்வற்றை வேதியியல் நஞ்சு காரணமாக, நஞ்சாகிய உணவினை உண்பதால் வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற கோளாறுகள் ஏற்படுதல்.

food,supplementary : துணை உணவு.

foot : பாதம்; அடிக்கால்; காலடி : கணுக்காலுக்குக் கீழேயுள்ள காலடிப் பகுதி.

foot, drop : தொய்கால்.

foramen : எலும்புப் புழை; எலும்புத் துளை; துளை : எலும்புகளில் ஊடுசெல்லும் புழை.

foraminae : துளைகள்.

force : விசை பலம்.

forced vital capacity (FVC) : கட்டாயச் சுவாச அளவு : நுரையீரல் களிலிருந்து வலிந்து வெளியேற்றக்கூடிய உச்ச அளவு வாயு.

force feeding : கட்டாய உணவூட்டல் : ஒருவரின் விருப்பத்துக்கு எதிராக அல்லது தேவைக்கு அதிகமாகக் கட்டாயமாக உணவு ஊட்டுதல்.

Forced Expiratory Time (FET) : கட்டாயச் சுவாச நேரம் : முழு ஊட்சுவாசத்துக்கு அல்லது முழு வெளிச்சுவாசத்துக்கு