பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

foundation

474

Framingham heart...


இருப்பதைக் கண்டறிவதற்கான சோதனை. ஒரு சோதனைக் குழாயில் 10 மி.லி சிறுநீருடன் 10% பேரியம் குளோரைடின் 5 மிலி சேர்க்கும்போது வெள்ளை வீழ்படிவு உண்டாகிறது. இதனை வடிகட்டி எடுத்து உலர்ந்த வடிகட்டும் தாள் மீது பரப்பினால், அதில் பச்சை முதல் நீலம் வரையில் பல வண்ணங்கள் படியும். இதிலிருந்து சிறுநீரில் பிலிரூபின் இருக்கிறதா என்பதை அறியலாம். ஃபிரெஞ்சு வேதியியலறிஞர் ஏ.ஃபூவுெட் பெயரால் அழைக்கப்படுகிறது.

foundation : அடிப்படை.

fourth heart sound (S4) : நான்காம் இதய ஒலி (S-4) : இதயக் கீழறைத் தடுப்புக்கு எதிராகத் தீவிரத் தமனிச் சுருக்கம் காரணமாக உண்டாகும் இயல்பு மீறி இதய ஒலி. இது முக்கியமாக இதயக் கீழறை உறுப்புப் பொருமலின்போது ஏற்படுகிறது. இது குறைந்த தொணிவுடைய ஒலி. இதனை முதல் இதய ஒலிக்கு அடுத்து முன்பு கேட்கலாம்.

foveola : பார்வைக் குழிவு : பார்வைத் திரையின் மிகவும் உட்குழிவான, மிகுந்த உணர் திறனுடையப் பகுதி.

Foville's syndrome : ஃபோவிஸ் நோய் : மண்டையோட்டின் V, VII நரம்புகளின் வாதம் ஃபிரெஞ்சு உளவியலறிஞர் ஏ.ஃபோவில் பெயரால் அழைக்கப்படுகிறது.

Fowler's position : ஃபவுலர் நிலைப்பாடு : நோயாளியின் படுக்கையின் தலைப்பகுதியும், அவரின் முழங்காலும் உயர்ந்திருக்கும் வகையில் இருக்கும் நிலை. இதனை அமெரிக்க அறுவை மருத்துவ வல்லுநர் ஜி.ஃபவுலர் அமைத்தார்.

fraction : கூறு.

fracture : எலும்பு முறிவு; முறிவு : காயம் காரணமாக எலும்பில் ஏற்படும் முறிவு.

fracture, complete : முழு முறிவு.

fracture, communated : பல் முனை முறிவு.

fracture, compound : கிழி முறிவு.

fracture, dislocation : பிசகு முறிவு.

fragilitas : எலும்பு முறிவு நோய் : எலும்பு அளவுக்கு மீறி நொய் மையாக இருப்பதன் காரணமாக அடிக்கடி முறிவு ஏற்படுதல். இது ஒரு பிறவி நோய்.

fragility : உடை நிலை.

Framingham heart study : ஃபிரேமிங்காம் இதய ஆய்வு : அமெரிக்காவில் மசாசூசேட்ஸ் மாநிலத்திலுள்ள ஃபிரேமிங்காம் நகரில், அமெரிக்கச் சுகாதாரச் சேவைத் துறையினர் 1948 முதல் நடத்தி வந்த ஒர் ஆய்வு. இரைப்பை குருதி நாள நோய் உண்டாவதற்கும், இரத்த அழுத்