பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

frenum

476

Froben


தடுக்கும் சிறுநரம்பினை அறுவைச் சிகிச்சை மூலம் அப்புறப்படுத்துதல் முக்கியமாகத் தெற்று நாக்கினைச் சீர்படுத்த இந்த அறுவை மருத்துவம் செய்யப் படுகிறது.

frenum : இயக்கத் தொடர் சவ்வு : உறுப்புகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் சவ்வு மடிப்பு.

frequency : தொடர் நிகழ்வு.

Freud, Sigmund : (1856-1939); ஃபிராய்டு, சிக்மண்ட் (1856-1939) : நரம்புக் கோளாறுகளுக்குக் காரணமான உளப் பகுப்பாய்வு கோட்பாட்டினை வகுத்தவர். மனிதரின் இயல்பான மற்றும் இயல்பு மீறிய நடத்தை முறைக் குப் பல்வேறு உளவியல் காரணங்களைக் கண்டு கூறியவர்.

Frey's syndrome: ஃபிரே நோய் : காதுமடல்-பொட்டெலும்பு நோய் இதனால் காதுமடல் பொட்டெலும்புப் பகுதியில் வலியும், மிகுந்தத கூச்சமும் திடீர் முக வீக்கம், கன்னத்தில் மிகை வியர்வு உண்டாகும். சாப்பிடும்போது, முக்கியமாக அதிக நறுமணப் பொருள்கள் நிறைந்த கரிகளைச் சாப்பிடும் போது இந்த வியர்வு உண்டாகிறது. இது பெரும்பாலும் சீழ்வடியும் புட்டாலம்மையைக் (பொன்னுக்கு வீங்கி) கீறிவிடுவதால் உண்டாகிறது. போலந்து மருத்துவ அறிஞர் லூசி ஃபிரே பெயரால் அழைக்கப்படுகிறது.

friar's balsam : பொன் மெழுகு : பண்டைக்காலத்தில் நோவகற்றும் மருந்தாகப் பயன்பட்ட நறுமணப் பொருள் சாராயத்தில் கரைக்கப்பட்ட சாம்பிராணி.

friction : மருத்துவத் தேய்ப்பு முறை : மருத்துவ முறைப்படித் தேய்த்து விடுதல், உராய்தல்.

friction, rub : உரசொலி.

Friedman's curve : ஃபிரைட்மன் வளைவு : இடுப்பு வலியை அதிகரிப்பதைச் சித்திரித்துக் காட்டும் ஒரு வரைபடம். அமெரிக்க தாய்மை மருத்துவ அறிஞர் ஃபிரைட்மன் இதனை விவரித்தார்.

Friedriech's ataxia : உறுப்புகள் ஒத்தியங்காமை : உடலுறுப்புகள் ஒத்தியங்க முடியாமல் இருத்தல். முதுகந்தண்டிலுள்ள உணர்வு மற்றும் இயக்க நரம்பு நாள மையங்களில் குழந்தைப் பருவத்திலேயே உள்ளரிக் காழ்ப்பு காரணமாக இந்நோய் உண்டாகிறது. இதனால் தசைநலிவடைந்து, தள்ளாட்டம் ஏற்படுகிறது. இதயமுங்கூட பாதிக்கப்படலாம்.

Frigidity : கிளர்ச்சியின்மை; காம மின்மை : பாலுறவு கொள்வதில் இயல்பான விருப்பம் இல்லாதிருத்தல். பெரும்பாலும் பெண்களுக்கு இந்நோய் உண்டாகிறது.

Froben : ஃபுரோபென் : ஃபிளர்பி புரோஃபென் என்னும் மருந்தின் வணிகப் பெயர்.