பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

frog

fugue


frog : ஒரு தவளை இனம்.

frog belly : தவளை வயறு : அங்கக்கோணல் உடைய குழந்தையின் தடித்த ஊசலாடும் அடி வயிறு.

frog face : தவளை முகம் : உள் மூக்குக் குழிகளிலுள்ள நீண்ட காலக் குருதி நாளக்கட்டி இது கண்குழிகள் வரைகூட நீண்டிருக்கும். இது முக்கடைப்பு, சலிப்பூட்டும் கரகரப்புக்குரல் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

frog plaster : தவளை சாந்துக் கட்டு : பிறவியிலேயே இடுப் பெலும்பு இடம் பெயர்வதைச் சீர் செய்வதற்காக அரைச்சாந்தினால் போடப்படும் மருத்துவக் கட்டு.

frontal : நெற்றி எலும்பு; தலை முன்னெலும்பு; முன் உச்சி; நெற்றி சார் : நெற்றியைச் சார்ந்த முன்பக்கமுள்ள எலும்பு.

frost : உறைபனி.

frostbite : பனிக்கடுப்பு; திசு உறைவு : கடுங்குளிரினால் ஏற்படும் பொல்லா வீக்கம்.

frosting : வெண்படலம் : தோலில் வியர்வைச் சுரப்பிகளுக்கு மேலாக நுண்ணிய குருணை போன்ற உப்பு படிதல். இது, நீர்க்கட்டி அழற்சியில் உள்ளது போன்று இருக்கும்.

froth : நுரை.

frown : புருவ நெரிப்பு; முகச் சுளிப்பு; சினக்குறிப்பு; கடுநோக்கு.

frozen : உறைந்த.

frozen chest : இருகிய மார்பு : நுரையீரல் அல்லது சோற்றுத் திசு அழற்சி. இதனால், மார்பு இயக்கமிழந்துவிடும்.

frozen shoulder : விறைப்புத் தோள்; தோள் இறுக்கம் : முதலில் வலி தோன்றி, பின்னர் விறைப்பு ஏற்பட்டுப் பல மாதங்கள் நீடிக்கும் வலி குறைந்ததும் இயல்பு நிலை திரும்பும் வரைப் பயிற்சி செய்தல் வேண்டும். இந்நோய்க்குக் காரணம் தெரியவில்லை.

frusemide : ஃபுரூசமிடி : சீரான சிறுநீர்ப் போக்கினை உண்டாக்கும் மருந்து. இதனை வாய்வழி உட்கொண்ட பிறகு 4 மணி வரை இது நீடிக்கிறது.

fructose : பழச் சர்க்கரை.

fructosuria : இனிம இழிவு.

FruSene : ஃபுருசென் : ஃபுரூசெமிடி என்ற மருந்தின் வணிகப் பெயர்.

frying : வறுத்தல்; பொறித்தல்.

Fucidin : ஃபூசிடின் : ஃபூசிட அமிலம் சோடியம் ஃபூசிடேட் இரண்டும் கலந்த கலவை மருந்தின் வணிகப் பெயர்.

fugue : இடமாற்ற நினைவிழப்பு : இடமாற்றத்துடன் ஏற்படும் நினவிழப்பு. இசிப்பு நோயின்போது அல்லது சிலவகைக் காக்கை வலிப்பு நோயின் போது இது உண்டாகிறது.