பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

acclimatize

47

acebutolol


acclimatize : சூழ்நிலை இணக்கம் : வேறுபட்ட சூழ்நிலைக்கும் இணக்கமாகிக் கொள்ளுதல்.

accident : ஏதம்; விபத்து; திடீர்; நேர்வு; தற்செயல் நிகழ்வு.

accidental : தற்செயல் நிகழ்ச்சி.

accidental haemorrahage : திடீர் நேர்வில் குருதி சிந்தல்.

acclimatation : சூழல் ஏற்பு உடல் : புதிய தட்பவெப்பநிலைக்கேற்ப உடல் பழகிக் கொள்ளல்.

acclimation : சூழல் ஏற்பு.

acclimatization : சூழல் இணக்கம்; இணக்கப்பாடு.

accommodation : இடம்; ஏற்பமைவு; தகவமைவு : விழிச் சிறு தசைகள் சுருங்கும்போது கண்மணி (பாப்பா) சுருங்கும் வினை. இதன் மூலம் கிட்டப்பார்வைக்கேற்பப் பார்வைத் தகவமைப்பு ஏற்படும்.

accommodation reflex : ஏற்பமை மறிவினை.

accommodometer : பார்வைத் திறன்மானி.

accommodation of eye : கண் சீரமைவுத் திறன் ஏற்புமைவு; கண் தகவமைவு; கண் இசைவமைவு : ஆடியின் புறக்குவி வினைபொருள்கள் அருகில் இருப்பதை அல்லது தொலைவில் இருப்பதைப் பொறுத்து மாற்றிக் கொள்வதற்குக் கண்ணுக்குள்ள ஆற்றல். இதனால், எப்போதும் பிம்பம் தெளிவாகத் தெரிகிறது.

accouchement : மகப்பேறு : பிள்ளைப்பேறு; பிரசவம்; மகப்பேற்று நிலை.

accoucheur : பேறுகால மருத்துவர் : பிள்ளைப்பேறு பார்ப்பதில் தேர்ந்தவர்; தாய்மை மருத்துவ வல்லுநர்.

accoucheuse : பேறு கால மருத்துவச்சி : தாய்மை மருத்துவத்தில் தேர்ந்த பெண்.

accreditation : மதிப்பேற்றுதல்;சான்றளித்தல் : ஒரு தொழில் நிறுவனத்தை அல்லது மருத்துவமனையை முறைப்படி சான்றிதழ் அளித்து ஒப்புக் கொள்ளுதல்.

accumulation : திரள்.

accurate : துல்லியம்.

accused : குற்றம் சாட்டப்பட்டவர்.

accretion : திரட்சி; வளர்படிமம்; ஒட்டுவளர்ச்சி : ஒரு மையப் பொருளைச் சுற்றிப் பொருள்கள் அதிகரித்தல் அல்லது படிதல். பல்லைச் சுற்றிக் கல்லடைப்பு அல்லது ஊத்தை திரள்வது இதற்கு எடுத்துக்காட்டு.

acebutolol : அசிபுட்டோலோல் : ஒழுங்கற்ற நெஞ்சுத் துடிப்பு, இடதுமார்பு வேதனைதரும் இதயநோய்; மட்டுமீறி மிக