பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

G

G : "ஜி" : கிராம், புவிஈர்ப்பு (gravity) ஆகியவற்றுக்கான சின்னம்.

G-actin : ஜி-ஆக்டின் : பல்வேறு உயிரணுக்களில் காணப்படும் ஒர் உருளைப் புரதம்.

G cell : ஜி-உயிரணு : கேஸ்டிரின் சுரக்கும் APUD உயிரணுக்கள். இவை முக்கியமாக இரைப்பையில் காணப்படும்.

GA : ஜி.ஏ (G.A) : பொது உணர்ச்சியின்மை (General anaesthesia) என்பதன் சுருக்கம்.

gag : வாயடைப்பு; வாயடைப்புக் கட்டை : வாய் திறந்தபடி இருக்கும்படி செய்வதற்குப் பல் மருத்துவர் இடும் பொறியமைப்பு.

gait : நடக்கும் பாணி; தோரணை; நடையமைவு : இணக்க அல்லது இயல்பு மீறிய நடக்கும் பாணி 'சிறு மூளை நடை' எனப்படும். சுழன்று தள்ளாடும், சாய்வான, கத்திரிக்கோல் நடையில் கால்கள் ஒன்றையொன்று குறுக்கே வெட்டுகின்றன. கால் விளங்காக் கோளாறினால் நடக்கும் பாணியில், பாதம் மிக உயரத்திற்குத் துக்கப்பட்டுத் திடீரெனத் தரையில் ஊன்றப்படுகிறது. இதில் பாதம் முழுவதும் தரையைத் தாக்கும்.

gait,weddling : வாத்துநடை.

gait,scissor : கத்திரிநடை.

galactagogue : பால் சுரப்பு மருந்து; பால் ஊக்கி; பால் பெருக்கி : தாயிடம் பால் சுரப்பதை அதிகரிக்கும் ஒரு வகை மருந்து.

galactocele : பால்கட்டி :பால் அல்லது பால் போன்ற திரவம் அடங்கிய நீர்க்கட்டி.

galactokinase : கோலாக்டோக்கினேஸ் : கிளைக்கோஜனின் வளர்சிதை மாற்றத்தில் பங்கு பெறும் செரிமானப் பொருள்.

galactorrhoea : மிகு பால் சுரப்பு; பால் சுரப்பு மிகைப்பு; பாலொழுக்கு : தாயிடம் இயல்புக்கு மீறி மிகுதியாகப் பால் சுரத்தல்.

galactosaemia : மிகு பால் சர்க்கரைப் பொருள் : இரத்தத்திலும், மற்றத் திசுக்களிலும் பாற்சர்க்கரைப் பொருள் மிகுதியாக இருத்தல், சிறுகுடலிலுள்ள பாற்சர்க்கரைப் பொருள், பால் வெல்லத்தை சர்க்கரையாகவும், பாற்சர்க்கரையாகவும் மாற்றுகிறது. நுரையீரலிலுள்ள மற்றொரு செரிமானப் பொருள் (என்சைம்), பாற் சர்க்கரைப்