பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

acedia

48

acetaldehdye


உயர்ந்த இரத்த அழுத்தம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் குண்டிக்காய்ச் சுரப்பி இயக்கு நீர்த் தடைப்படுத்தும் காரகி.

acedia : உணர்ச்சியின்மை; கவன மின்மை; சக்தியின்மை; மலைப்பு; மடிமை : வித்தியாசமாக இருக்கும் நிலை. சக்தியின்றி, உணர்ச்சி யின்றி சோர்வாக இருத்தல்.

acellular : அணுக்களற்ற : அணுக்கள் இல்லாநிலை.

acellularcementum : பற்காரை.

acephalous : தலையற்ற; கபாலமில்லாத.

acelomate : வயிற்றறையில்லா உடம்பு.

accentric : மத்தியில் இல்லாத : மத்திய ஒரு அணுக்கூறு இல்லாத ஒரு இனக்கீற்று.

acephalia : தலையற்ற : தலையற்ற பிறவி; பிறவியிலேயே தலை இல்லா நிலைமை.

acephalocyst : தொற்றிலா பைக்கட்டி.

acephalopodia : தூய பைக்கட்டி.

acephalous : தலையிலா.

acetabular : பந்துக் கிண்ண குழிவு : தொடையெலும்பின் பந்துக் கிண்ண முட்டுப் பொருந்துகிற குழிவு சார்ந்த.

acetalularlip : பந்துக் கிண்ண குழி விளிம்பு.

acetalularnotch : பந்துக் கிண்ண குழி மேடு.

acetabuloplasty : பந்துக் கிண்ணக் மூட்டு அறுவை மருத்துவம் : பிறவியிலேயே உள்ள இடுப்பு எலும்பு இடப்பெயர்ச்சி. இடுப்பு எலும்பு முட்டுவீக்கம் போன்ற கோளாறுகளில், தொடையெலும்பின் பந்துக் கிண்ணமூட்டு பொருந்துகிற குழிவின் ஆழத்தையும் வடிவையும் மேம்படுத்துவதற்குத் தேவைப்படும் அறுவைச் சிகிச்சை.

acetabulum : தொடை எலும்பு பந்துக்கிண்ண மூட்டு; பந்துக் கிண்ணக் குழிவு; கிண்ணக்குழி; கிண்ணி : தொடையெலும்பின் பந்துக்கிண்ண முட்டு பொருந்துகிற குழிவு.

பந்துக் கிண்ணக் குழிவு

acetaldehdye : அசிட்டால்டிஹைடு : பூஞ்சன நுரைத்தலின் போதும், சாராயம் வளர்சிதை மாற்றம் அடையும்போதும் உண்டாகின்ற வேதிப் பொருள்.