பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

gastrula

489

gene


போது அயல்பொருள்களை அப்புறப்படுத்துதல், குருதிக் குழாயில் குருதிக் கசிவைத் தடுத்தல், உணவுக் குழாயை அணுகுதல் போன்ற செயல்களுக் காக இரைப்பையில் துளையிடுதல்.

gastrula : பின் கருக்கோளகை நிலை : முதிரா நிலைக்கு கரு முனையில் கருக்கோளகைக்கு அடுத்த நிலை.

Gate theory : வாயிற் கோட்பாடு : வலியானது, குறிப்பிட்ட நரம்பு முனைகளைப் பொறுத்ததில்லை. மாறாக, தண்டுவடத்தை அடையும் உட்துண்டல்களின் சமநிலையையும், அலை அதிர்வெண் ஆகியவற்றைப் பொருத்ததாகும்.

Gaucher's disease : மண்ணீரல் விரிவாக்க நோய் : மண்ணீரல் அளவுக்கு மீறி விரிவடையும் நோய். இது சில யூதக் குழந்தைகளுக்கு வழி வழியாக வரும் ஒர் அரிய குடும்ப நோய்.

gauze : வலைவி.

gavage feeding : குழாய் வழி உணவூட்டல் : உணவுக் குழாயினுள் வாய் வழியாக ஒரு குழாயை செருகி வயிற்றுக்குள் திரவ உணவுகளையும், ஊட்டச்சத்துப் பொருள்களையும் செலுத்துதல்.

Gaviscon : காவிஸ்கான் : அலுமினியம் ஹைட்ராக்சைடும், மக்னீசியம் டிரைசிலிக்கேட்டும் கலந்த வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்தின் வணிகப் பெயர்.

G-cells : ஜி-உயிரணுக்கள் : குடல் சளிச் சவ்வில் இருக்கும் குடுவை வடிவ உயிரணுக்கள். முக்கியமாக இரைப்பைக் குழிவினுள் இவை இருக்கும்.

Gee's disease : கீ நோய் : வயிறு சார்ந்த நோயின் தொடக்க நிலை. பிரிட்டிஷ் மருத்துவ அறிஞர் சாமுவேல் கீ பெயரால் அழைக்கப்படுகிறது.

gelastic epilepsy : பொட்டெலும்பு வலிப்பு : பொட்டெலும்பு மடலில் வலிப்பு நோய்க் கசிவு காரணமாக ஏற்படும் பகுதி பிடிப்பு.

Gelgercounter : கதிரியக்கம் கண்டறியும் கருவி : கதிரியக்கத்தைக் கண்டபிடித்துப் பதிவு செய்யும் சாதனம்.

gelatin(e) : ஊன்பசை; ஊன்மம் : எலும்பு, தோல்களிலிருந்து எடுக்கப்பட்டு உணவுப் பொருள் உறை, ஒளிப்படத்தகடு, பசைகள் முதலியவற்றில் பயன்படும் கூழ் போன்ற பொருள்.

gene : மரபணு; மரபுக் கூறு; பண்பியக்கி : ஒரு குறிப்பிட்ட இனக் கீற்றில் (குரோமோசோம்) ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமைந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட அலகு. இது உயிர்மத்தின் இணைமரபுக் கீற்று ஆகும். இது மரபுவழிப் பண்புகளை காட்டுகிறது.