பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

geneologist

490

Geneva Convention.


geneologist : மரபியலார்.

geneology : மரபியல் : ஒரு தனி மனிதரின் அல்லது குழுமத்தின் வழி மரபு குறித்த ஆராய்தல்.

general : பொது தலைமை.

general anaesthesia : பொது உணர்விழப்பு : உணர்விழக்கும் படியும், நினைவிழக்கும் படியும் செய்வதற்காக உட்சுவாசம் அல்லது நரம்பு ஊசி மருந்து மூலம் பல்வேறான உணர்வு நீக்க மருந்துகளைச் செலுத்துதல்

general paralysis of the insane (GPl) : கிரந்திப் பித்து நிலை : கிரந் திப்புண் தொற்றுவதனால் மூளையில் ஏற்படும் பாதிப்பு. இதனால் மனத்தளர்ச்சியுண்டாகி பைத்தியம் ஏற்படும். தொடக்கத்தில் மறதி ஏற்பட்டு பின்னர் ஆளுமை சீர்குலைந்து போகும்.

generation : தலைமுறை.

generative : இனப்பெருக்கம் சார்ந்த.

genetor : மகப்பேறுடையார்.

generic : இனப்பொதுவியல்புடைய.

genesis : தோற்றம்; வளர்முறை : 1. எதுவும் தோன்றும் மூலம். 2. எதனையும் உண்டாக்கும் செயல்.

genetic : மரபணுநெறி; பிறப்பு மூலம் சார்ந்த; தோற்றம் தொடர்பான : மரபு வழிப்பட்ட பண்பியல் சார்ந்த.

genetic code : மரபுவழிப் பண்புவிதி; மரபணு நெறி : இனக்கீற்றின் டி ஆக்சிரிபோ நியூக்ளிக் அமில (DNA) மூலக்கூற்றில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் மரபுவழிப் பண்புப் பொருள் நிரல் வரிசைக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் பெயர். இந்த விதி முறையின்படிதான் மரபணுக் களில் அடங்கியுள்ள தகவல்கள் உயிரணுக்களுக்கு அனுப்பப் படுகின்றன.

geneticist : மரபணுவியலார்; மரபணுவறிஞர்; மரபணு வல்லார் : மரபுவழிப் பண்பியல் சார்ந்த உயிரியல் ஆய்வு.

genetics : மரபுவழிப் பண்பியல்; மரபியல்; மரபணுமுறை : பாரம் பரியம் பற்றியும் அதன் மாறுபாடு குறித்தும் ஆராயும் அறிவியல், அதாவது, மரபுவழிப்பு பண்புப் பொருள் பற்றியும், அது உயிரணுவுக்கு உயிரணு, தலைமுறைக்குத் தலைமுறை செல்வது குறித்தும் ஆராய்தல்.

'Geneva Convention : ஜெனீவா ஒப்பந்தம் : 1864ஆம் ஆண்டில் கையெழுத்தான ஒரு பன்னாட்டு உடன்படிக்கை. இதில் கையெழுத்திட்ட நாடுகள், காயமடைந்த ஆட்களையும், போர்க்களத்தில் பணியாற்றும் இராணுவ மருத்துவ மற்றும் செவிலிப் பணியாளர்களையும் நடுநிலையாளர்களாக நடத்த