பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

geniohyoid

491

genu,varum


வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டன. இந்த வசதிகளுக்கும் தாக்குதலிலிருந்து பாதுகாப்பளிக்கப்படுகிறது. பிடிக்கப்பட்ட மருத்துவப் பணியாளர்கள் உடனடியாகத் தாயகம் திருப்பியனுப்பப்பட வேண்டும்.

geniohyoid : மோவாய் அடிநா எலும்பு.

genital : பிறப்புக்குரிய; இனப் பெருக்க உறுப்பு; இனவுறுப்பு சார்ந்த;பிறப்புறுப்பிடம் : பிறப்பு றுப்புகளுக்குரிய.

genitalia : பிறப்புறுப்பு : புறபிறப்புறுப்புகள்.

genitocrural : பிறப்புறுப்பு-தொடை சார்ந்த : பிறப்புறுப்புப் பகுதி மற்றும் தொடை சார்ந்த.

genitalia, external : வெளியுறுப்பு.

genitourinary : பிறப்புறுப்பு-சிறு நீரகம் சார்ந்த; சிறுநீரகப் பிறப்புறுப்பு; செனிப்பி நீரிய : பிறப்புறுப்பு மற்றம் சிறுநீரக உறுப்புகள் சார்ந்த.

genome : மரபியல் உயிர்மம் : மரபணுக்களில் அடங்கியுள்ள அடிப் படை இனக்கீற்றுகளின் தொகுதி.

genomic imprinting : மரபணு முத்திரை : இனக்கீற்றின் மூலத் தோற்றத்தின் மூலமாக மரபணு வெளிப்பாடு பாதிக்கப்படுதல்.

genomic library : மரபணு நூலகம் : ஆய்வுக்குரிய உயிரணு வரிசை யின் மரபணுப் பொருள்கள் அனைத்தையும் உள்ளடக்கிய படியாக்கம் செய்த டிஎன்ஏ கூறுகளின் தொகுதி.

genotype : மரபுசார் வடிவம்; கால் வழியமைப்பு : ஒரு தனி மனிதரின் இனக்கீற்றுகளில் குறியீட்டு முறையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் முழுமையான மரபுவழிப் பண்பு பற்றிய தகவல்கள்.

genu : முழங்கால் முட்டி வளைவு.

genu pectroal position : முழங்கால்-மார்பு நிலை : உடலின் எடையை முழங்கால்களும், மார்பின் மேற்பகுதியும் தாங்கிக் கொண்ட, தோள்பட்டையையும் தலையையும் முன்பகுதித் தண்டு தாங்கி நிற்கும் நிலை.

genus : உயிரினம்; இனப்பகுப்புப் பேரினம் : ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடைய பல வகைகள் கொண்ட உயிரினங்களின் முழுநிறைக் குழுமம்.

genuvalgum (bow legs) : வளைவுக் கால்கள்; சப்பைக்கால்; வெளி வளைவு : கால்கள் இயல்புமீறி வெளிப்புறமாக வளைந்திருத்தல். இதனால், முழங்கால்கள் விலகியிருக்கும்.

genu,varum (knock knee) : இடிப்பு முழங்கால்; முழங்கால் உள்வளைவு :'கால்கள் இயல்புக்கு மீறி உட்புறமாக வளைந்திருத்தல், இதனால் முழங்கால்கள் இணைந்திருக்கும் போது