பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

gestation.ectopic

493

gingiva


gestation. ectopic : மாறிடக் கருவளர்ச்சி.

gestation, extrauterine : கருப்பை புற வளர்ச்சி.

gestation, period of : கருவளர் காலம்.

Ghonsfocus : கோன் குவி மையம் : தொடக்க நிலை நுரையீரல் காசநோயின் குவி மையம். செக் நோயியலறிஞர் ஆன்டோன் கோன் பெயரால் அழைக்கப் படுகிறது.

ghost cells : போலி உயிரணுக்கள் : சிவப்புக் குருதியணு எதுவு மில்லாமல் உயிரணுச் சவ்வு மட்டுமே உள்ள இரத்தச் சிவப்பணுக்கள். சிறுநீரை நுண் ணோக்கியால் ஆய்வு செய்யும் போது இது தென்படும்.

giant : பெரிய மிகப்பெரிய.

giant cell : பேரணு.

giddiness : மயக்கம்.

Gierke's disease : கியர்க் நோய் : ஈரலில் குளுக்கோஸ், ஃபாஸ்ஃபேட்டேஸ் செரிமானப் பொருள்கள் குறைவாக இருத்தல். இதனால், ஈரல் விரிவு, குருதிக் குளுக்கோஸ் குறைபாடு, மிகைச் சிறுநீர் அமிலம் ஆகியவை உண்டாகின்றன. ஜெர்மன் நோயியலறிஞர் எட்கர் வான் கியர்க் பெயரால் அழைக்கப்படுகிறது.

Giernards's disease : கியர்னார்ட் நோய் : உறுப்பு இறக்க நோய். நுரையீரல், கல்லீரல், உருவம்; பேருருவம் சிறுநீரகம் ஆகியவை கீழ் இறங்கி இடம்பெயர்வதன் காரணமாக கீழ் அடிவயிறு துருத்திக் கொண்டிருத்தல்.

gigantism : பாரிமை; அரக்க உருவம்; பேருருவம் : உடல் அளவுக்கு மீறி வளர்ந்திருத்தல்; முக்கியமாக உயரமாக வளர்ந்திருத்தல். உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக உதவுவதாக கருதப்படும் தூம்பற்ற மூளையடிச் சுரப்பியான கபச்சுரப்பியின் முன்பக்கத்தில் ஏற்படும் கழலை காரணமாக இது உண்டாகிறது.

Gilbert's disease : கில்பர்ட் நோய் : இரத்தத்தில் அளவுக்கு மீறி பிலிருமின் இருக்கும் நோய். இது உக்கிரமற்ற பரம் பரைநோய். இது இடைவெளி விட்டு இலேசான மஞ்சள் காமாலையாகத் தோன்றும். ஃபிரெஞ்சு மருத்துவ அறிஞர் நிக்கோலஸ் கில்பர்ட் இந்த நோயை விளக்கிக் கூறினார்.

Gilchrist's disease : கில்கிறிஸ்ட் நோய் : வட அமெரிக்கக் கரணை நோய். இது அமெரிக்கத் தோலியல் வல்லுநர் தாமஸ் கில்கிறிஸ்ட் பெயரால் அழைக்கப் படுகிறது.

ginger : இஞ்சி : மணமும் சுவையுமுண்டாக்குவதற்காகப் பயன் படுத்தப்படும் இஞ்சிக் கிழங்கு.

ginger, dry : சுக்கு.

gingiva : பல்லெயிறு; ஈறு : பல்லைச் சுற்றியுள்ள தசைத்திசு.