பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Glauber's salts

495

globus hystericus


Glauber's salts : கிளாபர் உப்பு : சோடியம் சல்ஃபேட், ஜெர்மன் வேதியியலறிஞர் ஜே.ஆர். கிளாபர் இதனைக் கண்டுபிடித்தமையால் இது 'கிளாபர் உப்பு' எனப் பெயர் பெற்றது.

glaucoma : கண்விழி விறைப்பு நோய்; விழி மிகையழுத்த நோய்; கண்ணழுத்த நோய் : கண்ணில் உள் அழுத்தம் காரணமாக உண்டாகும் நோய். இந்நோய் கடுமையானால் கடும் வலி ஏற்படும்.

gleno humeral : தோள்பட்டை எலும்புக் கிண்ணம் தொடர்பான : தோள் பட்டை மற்றும் முன் கால் மேற்புற எலும்பில் கிண்ணம் போன்ற குழிவான பகுதி தொடர்பான.

glenoid : எலும்புக் கிண்ணம் : எலும்புத் திசுவில் கிண்ணம் போன்ற குழிவு.

Glibenese : கிளைபினேஸ் : கிளிப்பிசைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

glioblastoma multiforme : மூளைக்கட்டி : கடும் உக்கிரத் தன்மையுடைய மூளைக்கட்டி.

glioma : மூளைத் திசுக் கட்டி : மூளை ஆதாரத்திசு உயிரணுக்களில் ஏற்படும் தொடக்க நிலைக்கட்டி இது உக்கிரத்திலும், வளர்ச்சி வேகத்திலும் வெகுவாக வேறுபட்டிருக்கும்.

glomerular : திரணை.

gliomyoma : நரம்புத்தசைக் கழலை : நரம்பு மற்றும் தசைத் திசுவில் உண்டாகும் ஒருவகைக் கடடி.

glipizide : கிளிப்பிசைட் : நீரிழிவு நோய்க்கு எதிராக வாய்வழி உட்கொள்ளப்படும் மருந்து.

glittercells : ஒளிரும் உயிரணுக்கள் : நுண்ணோக்காடியில் ஆய்வு செய்யும்போது சிறுநீரில், வெள்ளை இரத்த உயிரணுக்களின் திசுப் பாய்மத்தில் புலப்படும் குருணை நகர்வு.

globin : குளோபின் : இரத்தச் சிவப்பணுவுடன் இணைந்து செந்நிறக் குருதியணுப் பொருளாக மாறும் ஒரு புரதப் பொருள்.

globulin : தசைப் புரதம் : உப்பு நீரில் கரையும் இயல்புடன் உயிரினத் தசைக்கூறுகளில் காணப்படும் புரதவகை. இதில் நோய்த்தடைகாப்புக்கான A,D, E,G,M ஆகிய புரதங்கள் அடங்கியுள்ளன.

globulinuria : சிறுநீர்ப் புரதம் : சிறுநீரில் புரதம் கலந்திருத்தல்.

globus hystericus : தொண்டை அடைப்பு : தொண்டையில் தசை முண்டு அடைப்பது போன்ற உணர்வு. இது நரம்புக் கோளாறினால் உண்டாகிறது. இசிவு நோய் கவலை, மனச் சோர்வு நிலைகளில் இது ஏற்படும்.