பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

acetaminophen

49

acetobactor


acetaminophen : அசிட்டமினோபென் : காய்ச்சலைக் குறைக்கவும் வலியை நீக்கவும் பயன்படுகின்ற செயற்கை (முறையில் தயாரிக்கப்பட்ட) மருந்து அல்லது ஒரு வேதிப் பொருள்

actaphasia : புலப்படுத்தல் முறை : ஒரு கருத்தைச் சீராகக் கூற இயலாமை

acataposis : விழுங்க முடியாமை

acetate : அசிட்டேட் : அசிட்டிக் அமிலத்தின் (புளிங்காடி) ஒர் உப்பு

acetate silk : செயற்கைப் பட்டு

acetazolamide : அசிட்டாசோலமைடு : குறுகிய காலத்திற்கு சிறு நீர்க்கழிவினைத் துண்டுவதற்காக வாய்வழியே கொடுக்கப்படும் நீர்நீக்கி, கரிமம் சார்ந்த மருந்துப் பொருள். கண்விழி விறைப்பு நோயைக் குணப்படுத்த இது பயன்படுத்தப்படுகிறது

acetic acid : புளிய அமிலம்; அசிட்டிக் அமிலம் (புளிங்காடி) : புளிக்காடியில் உள்ள அமிலம். மூன்று வகை அசிட்டிக் அமிலங்கள் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. (1) உறை நிலை அசிட்டிக் அமிலம். இது சில சமயம் கடுங்காரமாகப் பயன்படுத்தப்படுகிறது. (2) சிறுநீர்க் சோதனைகளில் பயன்படுத்தப்படும் சாதாரண அசிட்டிக் அமிலம். இருமல் மருந்துகளில் அவ்வப்போது பயன்படுத்தப்படுகிறது

aceticanhydride : புளிய நீரிலி

acetoacetic acid : அசிட்டோ அசிட்டிக் அமிலம் : ஒரே உப்பு மூலமுடைய, அதாவது நீக்கி நிரப்பக்கூடிய ஹைட்ரஜன் ஒன்றுடைய ஒரு கரிம அமிலம். மனிதர் உடலில் கொழுப்புப் பொருள்கள் ஆக்சிகரமாகும் போது ஒர் இடைநிலையில் இது உற்பத்தியாகிறது. இரத்தத்தில் அளவுக்கு மேல் காடிப் பொருள் இருத்தல் அல்லது நீரிழிவு போன்ற சில வளர்சிதை மாற்றக்கோளாறுகளில், இது இரத்தத்தில் அளவுக்கு மீறி இருந்து, சிறுநீர் வழியாக வெளியேறுகிறது. சிறுநீர் வெளியேறாமல் இருந்தால், இது அசிட்டோனாக மாறுகிறது. இரத்தத்தில் இந்த அமிலம் அளவுக்கு மேல் இருக்கும். ஆனால், எல்லா உணர்ச்சியும் இழந்த முழு மயக்க நிலை உண்டாகிறது

acetoacetyl coenzyme : அசிட்டோஅசிட்டைல் கோஎன்சைம் : கொழுப்பு அமிலங்கள் உயிர் வளியேற்றம் அடையும்போது உண்டாகும் இடைநொதி

acetobactor : அசிட்டோபாக்டர் : சீடோஎமானாடேசியே எனும் பாக்டீரியா குடும்பத்தினைச் சார்ந்த ஒரு பாக்டீரியா இனப்