பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

gonalgia

500

gouge


தூண்டுகிற இயக்கு நீர் (ஹார் மோன்).

goralgia : முழங்கால் வலி.

Gondafon : கோண்டாஃபோன் : கிளைமிடின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

gonarthritis : முழங்கால் மூட்டு அழற்சி : முழங்கால் மூட்டில் ஏற்படும் வீக்கம்.

goniometer : மூட்டுமானி : மூட்டுக் கோணங்களை அளவிடு வதற்கான சாதனம். மூட்டு அசைவினை அளவிடுவதற்குப் பயன்படும் கருவி.

goniometry : மூட்டு அளவீடு : ஒரு மூட்டின் அசைவின் வீச் செல்லையை அளவிடுதல்.

gonioscope : கண்கோணமானி : கண்ணின் முன்புறக் கோணங்களை ஆராய்வதற்கான ஒளியியல் சாதனம்.

gonioscopy : கண்கோண அளவீடு; கோணம் காணல் : கண்ணின் முன்பக்க அறையின் கோணத்தைக் கண்கோண மானியினால் அளவிடுதல்.

goniotomy : கண்விழி அறுவை மருத்துவம்; கோணத் திறப்பு : கண்விழி விறைப்பு நோயைக் குணப்படுத்தப்படும் அறுவை மருத்துவம்

gonococcus : மேகவெட்டை நோய் தரு துன்பம்.

gonorrhoea : மேகவெட்டை நோய்; வெட்டை நோய் : வயது வந்தவர்களுக்குப் பாலுறவு மூலம் பரவும் நோய், அரிதாகக் குழந்தைகளிடமும் இது தொற்றும்.

Goodpasture's syndrome : குட்பாஸ்டர் நோய் : ஒரு தன்னியக்கத் தடை காப்புக் கோளாறு. இது தசைக்குச்ச அழற்சி, நுரையீரல் குருதிப்போக்கு ஆகியவற்றுடன் இணைந்து உண்டாகும். அமெரிக்க நோயியலறிஞர் எர்னஸ்ட் குட் பாஸ்டர் இதனை விளக்கிக் கூறினார்.

goose flesh : தோல் சிலிர்ப்பு : தோல் சிலிர்ப்பு நிலை. மயிர்க் கால்களுடன் இணைந்துள்ள நுண்ணிய தசைகள் சுருங்குவதால் தோல் சிலிர்ப்பு உண்டாகிறது. இது அதிகக் குளிரினாலும் பயத்தினாலும் எற்படும்.

Gopalan's syndrome : கோபாலன் நோய் : டிஃபோபிளேவின் என்னும் வைட்டமின்-B உயிர்ச் சத்துக் குறைபாட்டினால் உண்டாகும் ஊட்டச்சத்துக் குறை நோய். இதனால், கை கால் பகுதிகளில் எரிச்சலும், உள்ளங்கைகளில் அளவுக்கு மீறி வியர்வையும் ஏற்படும். இந்திய ஊட்டச்சத்து வல்லுநர் கோபாலன் பெயரால் அழைக்கப்படுகிறது.

gouge : நகவுளி; எலும்பு அகற்றுளி : அறுவை மருத்துவத்தில் எலும்பை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்