பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

gout

501

Grainger's method


படும் உட்குழிவான அலகுடைய உளி.

gout : மூட்டு வீக்கம் : மூட்டுகளிலும், காதுகளிலும், வேறிடங் களிலும் உள்ள குருத்தெலும்புகளில் சோடியம் பையூரேட் படிந்து ஏற்படும் ஒருவகை வளர்சிதை மாற்றக் கோளாறு. இதனால், கால் விரல் வீங்கி, கடும்வலி உண்டாகிறது. இப்போது இந்தச் சோடியம் பையூ ரேட்டை வெளியேற்றுவதற்கு மருந்துகள் உள்ளன.

Gower's sign : கோவர் குறியீடு : டிஷேன் தசைக் கோளாறில், நோயாளிக்கு இடுப்புத்தசை நலிவு காரணமாக கால்கள் மேலேறி நிற்கும் நிலை உண்டாதல்.

grade : தரம்.

Gradenigo's syndrome : கிரேடெனிகோ நோய் : காதின் மையப்பகுதியில் ஏற்படும் சீழ்க் கட்டு நோயில் ஆறாவது மண்டையோட்டு நரம்புவாதமும் ஒற்றைத் தலைவலியும் உண்டாதல். இத்தாலியக் காது மருத்துவர் ஜி. கிரேடெனிகோ பெயரால் அழைக்கப்படுகிறது.

graduated : கூறிட்ட.

graefe's knife : கிராஃபிக் கத்தி : கண்ணில் புரையை அகற்று வதற்குப் பயன்படுத்தப்படும் குறுகிய நுண்ணிய கத்தி.

graft : ஒட்டு முறை பதியம்; ஒட்டு : அறுவை மருத்துவத்தில் திசுவை அல்லது உறுப்பினை இடம் மாற்றிப் பொருத்துதல்.

graft-bone : எலும்பு ஒட்டு.

graft corneal : வழி ஒட்டுகை.

Graft versus Host disease : திசுப் பொருந்தாமை நோய் : உணர் வூட்டப்பட்ட ஏமக் காப்பு முறையில் தகுதிப்பாடுடைய கொடையாளி நிணநீர்த் திசுக்கள், ஏமக்காப்பு முறையில் தகுதிப் பாடில்லாத ஏற்புத் திசுவுக்கு மாற்றப்படும் பொழுது தோல், இரைப்பை குடல் குழல், ஈரல் குலை ஆகியவற்றில் எலும்பு மச்சை மாற்றம் செய்வதைத் தொடர்ந்து ஏற்படும் திசுப் பொருந்தாமை என்னும் துலங்கல்.

Graham's law : கிரகாம் விதி : "வாயுவின் அடர்த்தியின் வர்க்க மூலத்துக்குத் தலைகீழ் விகிதத்தில் அதன் பரவல் வீதம் மாறுகிறது" என்னும் விதி. இதனை பிரிட்டன் வேதியியல் வல்லுநர் தாமஸ் கிரகாம் வகுத்தார்.

Grainger's method : கிரெயின்கர் முறை : குழந்தை தன் சொந்தக் கையினால் அடிவயிற்றைத் தொட்டுச் சோதனை செய்யும் முறை. பெருமளவு மென்மைப் புள்ளியைத் தொடும் பொழுது குழந்தை கையை எடுத்துவிட்டு அழத்தொடங்கும். ஒத்துழைப்பதற்கு மிகவும் இளமையாக வுள்ள வீறிட்டழும் குழந்தை