பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

gramicidin

502

Grave's disease


களுக்கு இந்த முறை பயனுடை யதாகும்.

gramicidin : கிராமிசிடின் : உயிர் எதிர்ப்புத் தன்மை வாய்ந்த ஒரு கலவை ம்ருந்து. இது டைரோத் ரிசினிலிருந்து எடுக்கப்படுகிறது. மிகவும் நச்சுத் தன்மை வாய்ந்தது. ஆனால் வெப்ப மண்டலத்தில் பயன்படுத்தத்தக்கது.

Gram-negative : கிராம்-எதிர்படி : டெயிக்கோயிக் அமிலம் இல் லாத உயிரிகள். இவை பிறப்புறுப்பு-சிறுநீரகம் சார்ந்த மற்றும் இரைப்பை குடல் குழாய்களில் தொற்றுநோய்கள் உண்டாக்கும் கிராம் சாயத்தை எடுத்துக்கொள்வதில்லை.

Gram-positive : கிராம்-நேர்படி : தங்கள் உயிரணுச் சுவரில் டெயிக் கோயிக் அமிலத்தை உடைய உயிரிகள். இவை, தோலிலும், சுவாசக் குழாயிலும் தொற்று நோய்களை உண்டாக்கும் கிராம் சாயத்தை எடுத்துக் கொள்கின்றன.

Gram's stain : கிராம் சாயம் : படிக ஊதா, அயோடின், ஆல்கஹால் ஆகியவற்றினால் பாக்டீரியாவுக்கு நிறமூட்டும் செய்முறை. இவை கிராம்-எதிர் படியிலிருந்து கறையைப் போக்குகிறது. ஆனால் கிராம்-நேர் படி உயிரிகளிலிருந்து நீக்குவதில்லை. இதனை, டேனிஷ் மருத்துவ அறிஞர் ஹான்ஸ் கிராம் விவரித்தார்.

grandmal : பெருங்காக்காய் வலிப்பு; பெரு வலிப்பு; கால் கை வலிப்பு.

granny bashing : முதியோர் காயம் : முதியோரைக் கவனிக்கும் பொறுப்புடையவர்கள் அவர்களுக்கு விளைவிக்கும் காயங்கள்.

granulation : புண்முளை; வளர்வு; வளர் திசு : புண் முதலியவற்றில் குணமாவதற்கு வளரும் மணல் போல் முனைகளுடன் தோன்றும் திசு.

granulocyte : குருணை உயிரணு : குருணைகளைக் கொண்டுள்ள உயிரணு எதுவும். இது நியூட்ரோஃபில், ஈசினோஃபில், பாசோஃபில் போன்ற வெள்ளை உயிரணுக்களைக் குறிக்கிறது.

gramuloma : திசுக்கட்டி; குருணைக் கட்டி; வளர்மைக்கட்டி : ஆறி வரும் புண்மீதான திசுக்களினால் உண்டாகும் ஒரு வகைக் கட்டி.

graph : வரைவு.

graph, line : வரிவரைவு.

grasp : பற்று.

gravel : கல்லடைப்பு : சிறுநீர் பையில் மணிக்கற்கள் (பரல்கள்) கட்டுதல்.

gravel-voiced : கரகரப்புக் குரல்.

Grave's disease : கிரேவ் நோய் : கேடயச் சுரப்பு நச்சு நோய். இது குரல்வளைச் சரப்பி வீக்கம் (கழலை), கண்விழிப் பிதுக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. ஐரிஷ் மருத்துவ அறிஞர் ராபர்ட் கிரேவ்ஸ் பெயரால் இது விவரிக்கப்பட்டது.