பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

gravid

503

Greenville bypass


gravid : கருவுற்ற; சூல் கொண்ட.

gravity : ஈர்ப்பாற்றல்; ஈர்த்தல்; ஈர்ப்பு : பொருள்களிடையிலான இயல் ஈர்ப்பு வலிமைத் தரம்.

Grawitz's tumour : கிராவிட்ஸ் கட்டி : சிறுநீரகத்தில் உண்டாகும் தெளிவான உயிரணுப் புற்றுநோய். ஜெர்மன் நோயியலறிஞர் பால் கிராவிட்ஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.

gray baby syndrome : சாம்பல் குழந்தை நோய் : பிறந்த குழந் தைகளிடம் குறிப்பாகக் குறை மாதக் குழந்தைகளிடம் காணப்படும் ஒரு நச்சுத்தன்மை. குளோரோபெனிக்கோல் கொடுப்பதால் இது ஏற்படுகிறது. நச்சுத் தன்மையை நீக்கும் அளவுக்கு உடல் செயல்முறை வளர்ந்திருப்பதில்லை. மருந்து வெளியேறிவிடுகிறது. இதனால் சாம்பல் நிறம், மந்தநிலை, பலவீனம் உண்டாகிறது.

gray matter : சாம்பல் நிறப் பொருள் : மூளையிலும், தண்டு வடத்திலும் உள்ள சாம்பல் நிறப்பகுதி. இதில் நரம்பு இழைமங்கள், மையலின் என்ற பொதி சவ்வில் பொதிந்திருப் பதில்லை.

Green-Gordon tube : கிரீன் கார்டன் குழாய் : மணிக்கட்டின் வரிக்கச்சை, தோணி வடிவக் கொக்கி ஆகியவற்றுடன் கூடிய அக நோக்குக் குழாய் பிரிட்டிஷ் உணர்வியல் மருத்துவர் இதனை உருவாக்கினார்.

greenstick fracture : எலும்பு முறிவு : குழந்தைகள் வகையில் ஒரு புற எலும்பு வளைந்திருக்க மறுபுற எலும்பு முறிந்திருக்கும்.

Greenville bypass : கிரீன்வில் கிளைவழி : உடல் பருமனுக்காகச் செய்யப்படும் இரைப்பைக் கிளைவழி. இதில் இரைப்பையின் மேல் முனையில் ஒரு சிறுபகுதி தைத்து அடைக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டு, இடைக் குடலுடன் நாளப் பிணைப்பு செய்யப்படுகிறது.