பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

haemachrosis

508

haemaphersis


haemachrosis : மட்டுமீறிய இரத்தச் சிவப்பு : கார்பன்மோனாக்சைடு நஞ்சூட்டத்தில் காணப்படுவது போன்று, மட்டுமீறிய பளபளப்பாக உள்ள சிவப்பு இரத்தம்.

haemacytometer : குருதி உயிரணுமானி : குருதி உயிரணுக்களைக் கணக்கிடுவதற்கான ஒரு கருவி.

haemadsorption : ஒட்டுத்திறன் : குருதிச் சிவப்பு உயிரணுவின் மேற்பரப்பிலுள்ள ஒரு வினையூக்கியின் அல்லது பொருளின் ஒட்டுந்தன்மை.

haemagglutination : குருதியணு ஒட்டுத் திரட்சி : 1. ஒரு குறிப்பிட்ட தற்காப்பு மூலம் அல்லது நுண்ணுயிரிவினையூக்கி இருப்பதால் குருதிச் சிவப்பணுக்கள் கெட்டியாதல், 2. தடையுணர்வு வினை. 3. காப்பு மூலம் உண் டாக்கும் சிவப்பணுக்கள் ஒட்டத் திரட்சியடைவதைத் தடுக்கும் ஓர் ஏமக் காப்புவினை.

haemagglutinin : சிவப்பணுத் திரட்சி மூலம் : குருதிச் சிவப்பணுக்கள் ஒட்டத் திரட்சியடைவதை உண்டாக்கும் ஒரு தற்காப்பு மூலம்.

haemal : குருதி சார்ந்த : 1. குருதி அல்லது குருதி நாளம் சார்ந்த, 2. இதயம் அமைந்துள்ள வயிற்றுக்கும் முதுகந் தண்டுக்குமிடையிலான அச்சு.

haemanalysis : குருதிப் பகுப்பாய்வு : இரத்தத்தை வேதியியல் முறையில் பகுப்பாய்வு செய்தல்.

haemangioma : குருதிக் குழாய்க் கோளாறு : குருதிக் குழாய்கள் தவறாக எந்தப் பகுதியிலும் ஏற்படலாம். தோலில் இது செம்புள்ளியாகத் தென்படும்.

haemangion : இரத்த நாளத் தொகுதி : இரத்த நாளங்களைக் குறிக்கும் கூட்டு வடிவம்.

haemangiopericytoma : குருதி நாளக்கட்டி : குருதி நாள உயிர ணுக்களில் அல்லது பெரிசைட்டுகளில் ஏற்படும் ஒரு கட்டி இது கால்களிலும், வபையின் பின் பகுதியிலும் ஏற்படுகிறது.

haemangiosarcoma : இரத்த நாள உக்கிரக் கட்டி : இரத்த நாளங்களின் வேகமாகப் பரவி வரும் உள்வரித்தாள் சவ்விலிருந்து வளரும் உக்கிரமான கட்டி.

haemaphersis : குருதி நீக்கம் : அமைப்பான்களாகப் பகுக்கப்பட்டு, சில அமைப்பான்களை வைத்துக்கொண்டு, எஞ்சியுள்ள கூறுகளை நோயாளிக்குச் செலுத்துவதைத் தொடர்ந்து ஒரு கொடையாளிடமிருந்து அல்லது ஒரு நோயாளியிடமிருந்து குருதி முழுவதையும் அகற்றுதல்.