பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

acetohexamide

50

acety{cysteine


பிரிவு. இது மனிதர்களுக்குத் தீங்கு செய்வதில்லை

acetohexamide : அசிட்டோ ஹெக்சாமைடு : வாய்வழி உட்கொள்ளப்படும், நீரிழிவு நோய்க்கு எதிரான ஒரு மருந்து

acetomenapthone : அசிட்டோமொனாஃப்தோன் : வைட்டமின் K என்ற ஊட்டச்சத்தின் ஒரு செயற்கை வடிவம். வாய்வழி உட்கொள்ளும்போது தீவிரமாகச் செயற்படுகிறது. மஞ்சட்காமாலை நோயைக் குணப்படுத்துவதற்கும், நோய்த் தடுப்பு மருத்துவத்தில் பிறவி இரத்தப்போக்குக்கு எதிராகவும் இது பயன்படுத்தப்படுகிறது

acetonaemia : அசிட்டோந் மிகை இரத்தம்; அசிட்டோனேமியா; அசிட்டோனிரத்தம் : இரத்தத்தில் அசிட்டோன் பொருள்கள் கலந்திருத்தல்

acetone : அசிட்டோன் : உயிரியக்கச் சேர்மங்களுடன் கலந்து கரைசலாகும் இயல்புடைய நிறமற்ற படிக நீர்மம். இது எளிதில் தீப்பிடிக்கக் கூடியது

acetonuria : அசிட்டோனூரியா; அசிட்டோன் நீரிழிவு : சிறுநீரில் அளவுக்கு மேல் அசிட்டோன் பொருள்கள் இருத்தல். இதனால் இனிப்பான மணம் உண்டாகிறது

acetowhite lesions : அசிட்டோ வெண் சிதைவுகள் :கருப்பைக் கழுத்துப் பகுதியில் ஏற்படுகின்ற வெண்முண்டுப் புற்றுச் சிதைவுகள்

acetylation : அசிட்டைல் ஏற்றம் : ஒரு கரிமப்பொருளில் ஒன்று அல்லது அதற்கு மேலும் உள்ள எண்ணிக்கையில் அசிட்டைல் குலங்களைக் சேர்த்தல்

acetylcholine : அசிட்டில் கோலின் : தசையின் ஊனிர் சுரப்பிகளையும், மற்ற நரம்பு உயிரணுக்களையும் வினை புரியத் துண்டுவதற்காக நரம்பு முனைகளிலிருந்து வெளியாகும் வேதியியல் பொருள். இதனை வெளியிடும் நரம்பு இழைகள், கோலின் இழைகள் எனப்படும். நரம்பு முனைகளைச் சுற்றிலும், இரத்தத்திலும் பிற திசுக்களிலும் இருக்கும் அசிட்டில் கோலினஸ் டெராஸ் எனப்படும் செரிமானப் பொருளினால் (என்சைம்) கோலின், அசிட்டிக் அமிலம் ஆகியவற்றினுள் இது சேர்க்கப்படுகிறது

acetylcholinesterase : அசிட்டைல்கோலினஸ்டிரேஸ் : அசிட்டைல் கோலினைச் செயலற்றதாக்கும் ஒரு நொதி

acetylcysteine : அசிட்டில்சிஸ்டைன் : சிறுநீர்ப்பை இழை அழற்சியில் உள்ள குழம்பு நீர்ப்பொருள்