பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

haemarthrosis

509

haematogenous


haemarthrosis : மூட்டுக் குருதி; மூட்டில் குருதிக் கசிவு; குருதி மூட்டு; மூட்டுக் குருதிமை : மூட்டுகளின் குழியில் இரத்தம் சேர்ந்திருத்தல்.

haematemesis : இரத்த வாந்தி : அண்மையில் உண்ட உணவு இரத்த வாந்தியாக வெளிவந்தால் அந்த இரத்தம் ஒளிச்சிவப்பாக இருக்கும். இல்லையெனில் இரைப்பை நீரின் வினை காரணமாகக் காப்பித்தூள் போன்று கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும்.

haematic : குருதிவினை மருந்து.

haematin : இரும்புச் சத்து : உலர்ந்த குருதியிலிருந்து கிடைக்கும் பழுப்பு நிற இரும்புச் சத்துப் பொருள்.

haematidrosis : குருதிவியர்வை : இரத்தம் அல்லது இரத்த நிறமிகள் அடங்கியுள்ள வியர்வை.

haematinic : சிவப்பணு உற்பத்திப் பொருள்; இரத்த விருத்தி : இரத் தச் சிவப்பணுக்களும், அதன் அமைப்பான்களும் உற்பத்தியாவதற்குத் தேவையான பொருள்.

haematobium : குருதி ஒட்டுண்ணி : இரத்த உயிரணுக்களிலுள்ள ஒற்றை உயிரணு ஒட்டுண்ணி.

haematoblast : அடிப்படைக் குருதி உயிரணு : வேறுபடுத்திக் காட்டப்படாத அடிப்படைக் குருதி உயிரணு. இதிலிருந்து எலும்பு மச்சைச் சிவப்பணுக்கள், முதுகந்தண்டுவடச் சிவப்பணுக்கள், நிணநீர்ச் சிவப்பணுக் கள் பெறப்படுகின்றன.

haematocele : குருதிக் கழிவு : இரத்தக் குழி, இரத்த வண்டம்.

haematochyluria : சிறுநீர் இரத்தம் : சிறுநீரில் இரத்தழும் நிணநீரும் இருத்தல். இது யானைக்கால் நோயில் காணப்படும்.

haematocolpus : யோனிக்குழாய் குருதி; யோனிக் குருதிமை : பெண்ணில் கருப்பைக் குழாயில் (யோனிக் குழாய்) குருதி சேர்ந்திருத்தல்.

haematocrit : குருதிக் கணு வளைவு.

haematocyst : குருதிக்குழாய் நீர்க்கட்டி : 1. ஒரு நீர்க்கட்டியில் இரத்தம் கசிதல், 2. குருதிக் குழாய் நீர்க் கட்டி.

haematocyturia : சிறுநீர் சிவப்பணு : சிறுநீரில் இரத்தச் சிவப்பு உயிரணுக்கள் இருத்தல்.

haematogenesis : குருதி உறுவாதல்.

haematogenic haematogenous : குருதி வழிப் பரவல் : 1. குருதிக் குழிவுசார்ந்த 2 குருதியிலிருந்து உண்டாகும் எதுவும். 3. இரத்த வோட்டம் மூலம் பரவுதல்.

haematogenous : குருதி உறுவாதல்.