பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

haematology

510

haemocytometer


haematology : குருதியியல் : குருதி உருவாதல், அதன் அமைப் பான்கள், அதன் பணி, குருதி நோய்கள் ஆகியவை பற்றி ஆராயும் அறிவியல்.

haematoma : குருதிக் கட்டி : இரத்தம் சேர்ந்து உண்டாகும் வீக்கம்.

haematometra : கருப்பைக் குருதி : கருப்பையில் குருதி திரண்டிருத்தல். இதனை மாதவிடாய் திரவம் என்றும் கூறுவர்.

haematomyelopore : தண்டுவடத்துளை : இரத்தப்போக்கு காரணமாகத் தண்டுவடத்தில் துளைகள் உண்டாதல்.

haematopathololgy : குருதி நோயியல் : குருதிநோய் ஆய்வு தொடர்பான நோயியலின் ஒரு பிரிவு.

haematopoiesis : யோனிக் குழாய்க் குருதி; குருதி உற்பத்தி; குருதியாக்கம்.

haematosalpinx : கருக்குழாய்க் குருதி; குருதி அண்டக் குழல் : மனிதக் கரு உறுப்பிலிருந்து கருவெளியேறும் குழாயில் உள்ள இரத்தம்.

haematozoa : குருதி ஒட்டுண்ணி. இரத்தத்திலுள்ள ஒட்டுண்ணிகள்.

haematuria : சிறுநீர்க்குருதி; குருதிச் சிறுநீர்; குருதியிழிவு : சிறுநீரில் இரத்தம் இருத்தல்.

haeme : குருதிச் சிவப்பு : குருதிச் சிவப்பணு நிறமியின் நிறமிப் பகுதியாக அமைந்துள்ள புரோட்டோ போர்பிரின் அடங்கியுள்ள ஓர் அயம். இது அதன் ஆக்சிஜன் கொண்டு செல்லும் திறனுக்குக் காரணமானதாகும்.

haemobilia : பித்தநீரிக்குருதி : பித்தநீரில் அல்லது பித்த நீர் நாளங்களில் இரத்தம் இருத்தல்.

haemochromatosis : திசு அயப்பெருக்கம் : இரும்பு வளர்சிதை மாற்றத்தில் பிறவிலேயே ஏற்படும் கோளாறு. இதனால் திசுக்களில் இருப்புச் சத்து அதிகரிக்கிறது. இதன் காரணமாகத் தோல் பழுப்பு நிறமாகிறது. ஈரவிறைப்பும் உண்டாகிறது.

haemoconcentration : குருதி அடர்வு; சிவப்பணுப் பெருக்கம்; குருதிச் செறிவு : இரத்தத்தில் நிணநீர் அளவைவிட இரத்தச் சிவப்பணுக்கள் அதிகமாக இருத்தல்.

haemocytoblast : எலும்பு மச்சை உயிரணு; குருதி முன்மம் : எலும்பு மச்சையின் மூல உயிரணுக்கள்.

haemocytometer : குருதியணு அளவைமானி : இரத்தத்திலுள்ள குருதியணுக்களின் எண்ணிக்கையை அளவிடுவதற்கான கருவி.