பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hair-on end

514

hallucinosis


இதில் ஒரு மயிரிழையின் வேர் அடங்கியிருக்கும்.

hair-on end appearance : மயிரிழை முனைத் தோற்றம் : எலும்புக்குச் செங்குத்தாக உள்ள சுண்ணகமயமாக்கிய உட்குழிவுகளாகத் தோன்றுகிற ஊடுகதிர்ப்படத் தோற்றம். இது பிறவி இரத்தச்சோகை நோய்களில் காணப்படும்.

hairy cell leukaemia : மயிரிழை உயிரணு வெண்புற்று : "பி" உயிரணு வெண்புற்று நோய். இது குருதியிலும், எலும்பு மச்சையிலும், மயிரிழை உயிரணுக்களாகத் தோன்றும். இது நோய்ச்சிகிச்சைக்குப் பயன் படுகிறது.

hairy naevus : மயிரிழை மச்சம் : ஒரு நிறமி மச்சம் (மறு) இதில் மயிரிளைகள் வளர்ந்திருக்கும்.

hakeem : மருத்துவர்.

hale : உடல்திடமான; நலமுடைய; திடமான.

half breed; கலப்பினக் குழந்தை.

half brother : ஒன்றுவிட்ட உடன்பிறப்பு.

half line fracture : அரைவரி முறிவு : ஊடுகதிர்ப்படத்தில் தோன்றும் ஒரு சிறிய முறிவு. இது ஒர் எலும்பின் இரு கோடு களுக்கிடையில் ஒரு மெல்லிய கோடாகத் தோன்றும்.

haldol : ஹால்டோல் : ஹால்பெரிடோல் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

halibut liver oil : தட்டை மீன் எண்ணெய் : பெரிய தட்டைமீனின் துரையீரலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய். இதில் வைட்டமின் A, வைட்டமின் D நிறைந்துள்ளன. காட் என்னும் மீனின் துரையீரலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை விட இதைக் குறைந்த அளவில் பயன்படுத்தினால் போதும்.

halitosis : ஊத்தை நாற்றம்; வாய் நாற்றம்; நாறும் மூச்சு; மூச்சு நாற்றம் : மூச்சு விடும்போது கெட்ட நாற்றம் ஏற்படுதல்.

hallucination : மாயக் காட்சி(மருட்சி); மாயத் தோற்றம்; இல் பொருள் தோற்றம்; பிரமை; மாய்மை : உண்மையான புலன் துண்டுதல் எதுவுமின்றி ஏற்படும் பொய்யான தோற்றம். இது முரண் மூளை நோய் உட்பட உளவியல் கோளாறுகளின் போது ஏற்படும்.

hallucination,auditory : கேள்மாய்மை.

hallucination,visual : காண்மாய்மை.

hallucinogens : மாய்மையாக்கி.

hallucinosis : மாயத் தோற்றப்பித்து நிலை; இல்பொருள் தோற்ற நோயாளி : நோயாளிக்கு மாயத் தோற்றங்கள் உண்டாகும் ஒரு