பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hallux

515

hamatroma


பைத்திய நிலை. இதில் பெரும்பாலும், மாய ஒலிகளும், பொய்க் காட்சிகளும் உண்டாகும்.

hallux : குளம்பு விரல் காற் பெருவிரல் : கால் விரல்கள் பெரிதாகக் குளம்பு போல் இருத்தல் இந்த விரல்கள் மற்ற பாதத்தை நோக்கி இருக்கும்.

hallux valgus : கோணப் பெருவிரல்.

halo : முழந்தாழெலும்பு : வட்ட இடுப்பெலும்புத் தசைச் சுரிப்பைச் சுற்றியிருக்கும் முழந்தாழெலும்பு.

halo appearance : முழந்தாழெலும்புத் தோற்றம் : வதக்கிய மாவு போன்று இலேசான அடர்த்தியுடன் கூடிய தோற்றம். இது வட்ட வடிவமான கருநிறமுடைய அடர்ந்த மண்டலங்களுக்குள்ளேயும், வெளியேயும் காணப்படும்.

halogen : உப்பீனி (ஹேலோ ஜென் : புரோமின், குளோரின், ஃபுளோரின், அயோடின் போன்ற அலோகத் தனிமங்களில் ஒன்று.

halo naewus : முழந்தாழெலும்பு மச்சம் : கரும்புற்று நோய் சார்ந்த மச்சம். இதைச் சுற்றி நிறமற்ற சுற்று வரை மண்டலம் அமைந்திருக்கும்.

halo peridol : ஹாலோ பெரிடால் : முரண் மூளைநோய் போன்ற உளவியல் கோளாறுகளைக் குணப்படுத்துவதற்கான ஒரு வகை மருந்து. இதனை வாய் வழி உட்கொள்ளலாம். தேவைப்பட்டால் ஊசி மூலமும் செலுத்தலாம்.

halothane : ஹாலேத்தேன் : சுவாச மயக்க மருந்தாகப் பயன் படுத்தப்படும், தெளிவான நிறமற்ற திரவம், இது தீப்பிடிக்காது; இதமான மணமுடையது; எரிச்சலூட்டாதது.

Halo-vest traction : அகல்வட்டக் கச்சு இழுப்பு : கழுத்து எலும்பு முறிவுகளைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப் படும் ஒரு வகை இழுவை வடிவம். இதில் அகல் வட்டக் கச்சு வடிவக் கருவியின் உலோகப் புழையில் கழுத்தை மாட்டி அசைவற்றதாக்கப் படுகிறது.

Halsted's operation : ஹால்ஸ்டெட் அறுவை மருத்துவம் : 1. அரைசார்ந்த குடலிறக்கத்துக்கான அறுவை மருத்துவம், 2. மார்பகப் புற்றுநோய்க்கான மார்பகப் புற்று அறுவை மருத்துவம் அமெரிக்க அறுவை மருத்துவ வல்லுநர் வில்லியம் ஹால்ஸ் டெட் பெயரால் அழைக்கப் படுகிறது.

hamatroma : பிறழ்ச்சிக் கட்டி : தோன்றுமிடத்திற்குரிய முதிர்த் திசுக்களின் அமைப்பான்களையுடைய ஒரு பிழையான கட்டி