பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Hamilton's ruler test

516

Ham's test


இந்த அமைப்பான்கள் இயல்பு திறம்பிய வகையில் அமைந்திருக்கும். குருத்தெலும்பு கொழுப்பு, இழைமத் திசுக்கள், மென்தசை, நரம்பு உயிரணுக்கள், புறத்தோல் திசுக்கள், சுண்ணகமயமாக்கிய பிளவுகளின் குவி மையங்கள் ஆகியவை அடங்கிய ஒரு தீவாக இது அமைந்திருக்கும்

Hamilton's ruler test : ஹாமில்டன் விறைப்பு வரைகோல் சோதனை : ஒரு விறைப்பான வரைகோல் ஒரே சமயத்தில் திருகு தோளையும், புய எலும்பின் இடைமட்ட வட்டப் புடைப்பையும் தொட முடியாது. ஏனெனில் புய எலும்பின் பெரிய எலும்பு மேடு உள்முகமாக துருத்திக் கொண்டிருக்கும். தோள் பிறழ்வதால் அல்லது தோள்பட்டையின் கழுத்தில் எலும்பு முறிவு ஏற்படுவதால் இந்த நிலை ஏற்படுகிறது.

Hamman's disease : ஹாம்மான் நோய் : நுரையீரல் திசு விரிவாக்க நோய். அமெரிக்க மருத்துவ அறிஞர் லூயி ஹாம்மான் பெயரால் அழைக்கப்படுகிறது.

hammer : சுத்தி.

hammer, percussion : தட்டு சுத்தி.

hammer toe : கால்விரல் கோணல்; சுத்தி விரல் : கால் விரல்களில் ஒன்று நிலையாக மேல் நோக்கி வளைந்து மடிந்திருக்கும் அங்கக் கோணல்.

hamstring : பின்தொடைத் தசை நார் : 1. தொடையின் பின் பகுதியிலுள்ள மூன்று தசைகளின் ஏதேனும் ஒன்று. இவை காலை நீட்டி மடக்க தசைகளை நீட்டவும் சுருக்கவும் செய்கின்றன. 2. முழங்கால் பின் பகுதிக் குழிவின் நடுமைய மற்றும் கிடைமட்ட எல்லைகளாக அமைகிற தசை நாண்களில் ஒன்று.

Ham's test : ஹாம் சோதனை : 37°C நோய் நுண்மப் பெருக்க நிலையில் இயல்பான குருதி வடிநீருடன், வலிப்பு இசிப்பின் இரவு நேர சிறுநீர்ச் சிவப்பணு நிறமி உடைகிறது. ஆனால்,