பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hang naii

518

harełip


சேதம் உண்டாகும். ஊர்தி விபத்துகளில் இது அடிக்கடி எற்படும்.

hang mail : நகத்தோல் : நகமடிப்பிலிருந்த ஒரு பகுதி விடுபட்டி ருக்கும் குறுகிய தோல் பட்டை.

H antigen : “எச்" காப்பு மூலம் : பாக்டீரியக் கசையிழையிலுள்ள திசு ஒத்தியல்புடைய காப்பு மூலம்.

haploid : இனக்கீற்றுச் செம்பாகம் : பாலின உயிரணுவில் உள்ளது போன்று இயல்பான இனக் கீற்றுகளின் பாதி எண்ணிக்கையைப் பாதியாக்குதல். இது மனிதர்களிடம் 23 என்ற எண்ணிக்கையில் இருக்கும்.

haplotype : இணைஇனக்கீற்றுக் கூட்டம் : ஒர் இனக்கிற்றின் ஒரே நிலையிடத்தில் இணை இனக்கீறுகளின் ஒரு கூட்டம் அமைந்திருத்தல்.

haptoglobin : சளிச் சவ்வுப் புரதம் : ஒரு வகைக் கோழைப் புரதம். இதனுள் உடைப்பட்ட சிவப்பணுக்கள் கொட்டப்படுகின்றன. இதனைக் குருதிநீர் சூழ்ந்திருக்கும்.

hard : கடினமான; இறுகிய.

hard metal disease : கன உலோக நோய் : கோபால்ட், டங்ஸ்டன் ஆகியவை அடங்கிய தூசியை உள் சுவாசித்தல். இது தொழில் காரணமாக ஏற்படும் ஆஸ்துமாவுடன் அல்லது நுரையீரல் நோயுடன் இணைந்திருக்கலாம்.

hard X-rays : கடின ஊடுகதிர் : குறுகிய அலை நீளம், அதிக அலைவெண், அதீத ஊடுருவு திறன் உடைய ஊடுகதிர்.

hard water syndrome : கடின நீர் நோய் : அயம், கால்சியம், மக்னீசியம் ஆகியவை அதிக அளவில் அடங்கியுள்ள கடின நீரைப் பயன்படுத்துவதால் உண்டாகும் ஒரு நோய். இது குருதிக் கலவைப் பிரிவினையின் போது ஏற்படும். இதனால், குருதிக் கலவைப் பிரிவினைக் குப் பிந்திய குமட்டல், வாந்தி வலுவிழப்பு உயர் இரத்த அழுத்தம் உண்டாகும்.

harelip : பிளவு உதடு (ஒருவாய்); பிளவு இதழ் : முயலுக்கு இருப் பதைப் போன்று பிளவுபட்ட மேல் உதடு, இது பிறவிலேயே ஏற்படுவது.