பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

acetylsalicylic acid

51

achondrogenesis


acetylsalicylic acid : அசிட்டில் சாலிசிலிக் அமிலம் : உணர்ச்சி யின்மை உண்டு பண்ணுகிற அல்லது நோவகற்றும் மருந்தாகப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிற ஒரு மென்மையான மருந்து. ஏராளமான நோவகற்றும் மாத்திரைகள் தயாரிக்க அடிப்படைப் பொருளாகப் பயன்படுகிறது. ஆஸ்பிரின் என்பது இதன் அதிகாரபூர்வமான பெயர்.

acetyltransferase : அசிட்டைல் டிரான்ஸ்பரேஸ் : இது ஒரு வகை நொதி. ஒரு பொருளிலிருந்து அசிட்டைல் மருந்தை மற்றொரு பொருளுக்கு மாற்றும் தன்மை உடையது.

achalasia : உணவுக் குழாய் அலைவிழப்பு; தளர்விழப்பு: தளராமை : தசை நரம்புகளைத் தளர்வுறுத்தத் தவறுதல்.

ache : வலி, வேதனை நோவு : உடலில் ஏற்படும் தொடர் நோவினால் உருவாகும் வலி.

achievement : சாதனை; இலக்கு அடைதல்; குறிக்கோள் எட்டுதல்.

achiles : குதிகால் தசைநார்; குதிநாண் : உடலில் மிகவும் பலம் வாய்ந்த நாண். இது குதிகால் எலும்பினுள் செலுத்தப்பட்டுள்ள கணுக்கால் முழங்கால் மடக்குத் திசையின் தசை நாண் முனை.

achilles tendon : குதிகால் தசைநார்; குதிநாண் : குதிகால் எலும்பினுள் செலுத்தப்பட்டுள்ள இளக்க மற்றும் கெண்டைக்கால் புடைப்புத் தசைகளின் தசை நாண்முனை.

achillorrahaphy : குதிநாண் தைப்பு.

achillotomy : குதிநாண் வெட்டு.

achlorhydria : ஹைடிரோ குளோரிக் அமிலமின்மை : வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் இல்லாதிருத்தல். மரணம் விளைவிக்கும் இரத்த சோகை, இரைப்பைப் புற்று ஆகிய நோய்களின் போது இந்நிலை தோன்றும்.

achlorhydria : ஹைடிரோ குளோரிக் அமிலமின்மை; புளிய மின்மை :இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் இல்லாதிருத்தல் அல்லது சுரக்காதிருத்தல், மரணம் விளைவிக்கும் இரத்தச் சோகை, இரைப்பை புற்றுநோய் ஆகிய நோய்களின் போது இந்நிலை தோன்றும்.

acholia : பித்த நீரின்மை.

acholuria : அக்கோலுரியா; பித்தமற்ற நீரிழிவு : சிறுநீரில் பித்தநீர் நிறமி இல்லாதிருத்தல்.

acholuric : பித்தமிலா நீர் வடிதல்.

achondrogenesis : எலும்பு வளர்ச்சித் தடை : கை மற்றும் கால் எலும்புகளின் வளர்ச்சி தடைபடும் நிலை.