பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Hawkinsinuria

520

health centre


Hawkinsinuria : ஹாக்கின் சினூரியா : பச்சிளங்குழந்தைகளிடம் அளவுக்கு அதிகமாக டைரோசின் என்ற வளர்சிதைமாற்றப் பொருள்கள் சுரத்தல். தாய்ப்பால் குடிப்பதை நிறுத்திய பிறகு இது ஏற்படும். அத்துடன், வாந்தி, வளர்ச்சிக் குறைபாடு, அமிலத் தேக்கம், ஒரு நீச்சல் குளத்தில் உள்ளது போன்ற நெடி ஆகியவையைம் உண்டாகும். இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஹாக்கின்சின் குடும்பத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது.

head : மண்டை; தலை.

head ache : தலை வலி :மண்டைக் குத்தல் நோய். இதில் தலையில் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் கடுமையான வலி உண்டாகிறது. இது எதேனும் நரம்பின் பகிர்மான மண்டலத்துடன் நின்றுவிடுவதில்லை.

head hunter : தலைவேடன் : தமனி இயக்க விரைவியலில் தொடைக் குருதிக் குழாயிலிருந்து கழுத்துத் தமனிகளிலிருந்து நுழைவதற்கு வடி வமைக்கப்பட்ட வளைவுள்ள செருகு குழல் முனை.

head-work : மூளைவேலை; சிந்தனை.

Heaftest : காசநோய்ச் சோதனை : ஒரு தனிவகைத் துப்பாக்கி மூலம் மேந்தோலில் பல துளைகள் இட்டு நடத்தப்படும் காச நோய்ப் பரிசோதனை. துளையிட்டதால் வீக்கம் ஏற்படுமானால், காசநோய் உள்ளது என்று அறியலாம். -

heal : குணமாதல்; குணமடைதல்.

heating : குணப்படுத்துதல்; ஆறல் : நோயாளியை மீண்டும் நலம் பெறச் செய்தல், நோயாளியை இயற்கை முறையில் குணப்படுத்துதல் அல்லது திசுக்களைச் சீர்படுத்துதல்.

heal-all : சஞ்சீவி : அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் மருந்து.

health : உடல் நலம்; நலவாழ்வு : நலன் உடல், உள்ளம் சமூகம் அனைத்தும் முழுமையான நலத்துடன் இருப்பதே ஆரோக்கியமான உடல் நலம் என்று உலகச் சுகாதார அமைவனம் கூறியுள்ளது. நோய் அல்லது ஊனம் எதுவும் இல்லாதிருப்பது மட்டும் உடல் நலம் ஆகாது, சமூக நிலையிலும், பொருளாதாரத்திலும் சுறுசுறுப்பாக இயங்கும் திறனுடன் இருப்பதே ஆரோக்கியமான வாழ்வு ஆகும்.

health centre : சுகாதார மையம் : அடிப்படைச் சுகாதார மையங்கள், ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளுக்கான துணை மையங்கள் வாயிலாக அடிப்படைச் சுகாதாரச்