பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

health,community

heart-lung,machine


சேவைகளை, வழங்குதல். இது, ஒருங்கிணைந்த குணப்படுத்தும் மற்றும் நோய்த் தடுப்புச் சேவைகளை அளிக்கிறது.

health, community : சமுதாய நலவாழ்வு.

healthful : உடல்நலம் சார்ந்த; உடல்நலம் உருவாக்குகிற; உடல் நலம் பேணும்; உடல்நலம் குறித்த; உடல்நலத்துக்கேற்ற.

health, mental : மனநலன்.

health officer : நல அலுவலர்.

health, school : பள்ளிச் சிறுவர் நலம்.

health, visitor : நலப்பார்வையாளர்.

healthy : உடல் நலமிக்க.

hear : கேள்; தகவல்பெறு; அறியப் பெறு; செய்தியுணர்.

hearing : கேட்லல்;கேட்பு.

hearing-aid : கேட்புக்கருவி : கேட்புப்புலனை மேம்படுத்தும் ஒரு வகைப் பொறியமைவு.

heart : இதயம் : உடலில் குருதி ஒட்டத்தை ஊக்குவிக்கும் உறுப்பு. இது மார்பெலும்புக்குப் பின்புறம் இரு நுரையீரல்களுக்கு மிடையில் சாய்வாக அமைந்துள்ளது.

heart beat : இதயத்துடிப்பு.

heart block : இதய அடைப்பு : எஸ்.ஏ.கரணையில் இதயக் கீழறைக்கு உட்துண்டுதல் செல்வதில் ஏற்படும் கோளாறு. இது நீண்ட நேரம் நீடிப்பதாக (முதல்நிலை), துடிப்பு குறைவதாக (இரண்டாம் நிலை), அல்லது சுதந்திரமான இதயக் கீழறை ஒசை ஒழுங்கு (முழுமை) உடையதாக இருக்கலாம்.

heart,block : இதயத்தடை.

heart-blood : உயிர்க்குருதி; உயிர்.'

heart, burn : நெஞ்செரிச்சல்.

heart, diseas : இதய நோய்.

heart, failure : இதயச்சோர்வு.

heartburn : நெஞ்செரிப்பு : செரிமானக் குறைவினால் ஏற்படும் நெஞ்சு எரிச்சல், உணவுக் குழாயினுள் அமிலப் பின்னோட்டம் காரணமாக இரைப்பையில் அல்லது மார்பெலும்பின் கீழ்ப்பகுதியில் இந்தக் கோளாறு உண்டாகிறது.

heart chamber : இதய அறை : இரத்தவோட்டத்தை ஒழுங்கு படுத்துவதற்கு இதயத்தினுள் உள்ள விரிந்து சுருங்கும் நான்கு மண்டலங்களில் ஒன்று.

heart-lung, machine : இதயம் நுரையீரல் எந்திரம்; இதய நுரையீரல் பொறி : ஆக்சிஜனேற்றிய ஒரு குருதி நாளத்திலிருந்து இரத்தத்தை வெளியேற்றி மீண்டும் அதில் குருதியைச் செலுத்துவதற்கான ஒர் எந்திரம்.