பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

heart valve

522

heliotherapy


heart valve : இதயத் தடுக்கிதழ் :சுருக்கமடைந்த அல்லது போது மானதாக இல்லாத இதயத் தடுக்கிதழுக்குப் பதிலாகப் பொருத்தப்படும் செயற்கைச் சாதனம். இது எந்திர முறையிலானதாகவோ, உயிரியச் செயற்கைச் சாதனமாகவோ அல்லது பன்றிக்குரியதாகவோ இருக்கலாம்.

heat : வெப்பம்; சூடு.

heart exhaustion : வெப்ப மயக்கம்; வெப்பச் சோர்வு : கடும் வெப்பம் காரணமாகச் சோர்வு ஏற்பட்டால் உண்டாகும் மயக்கம் அளவுக்கு மீறி வியர்வை கரந்து உடலிலுள்ள திரவமும், உப்பும் இழக்கப்படுவதால் உண்டாகிறது.

heat, opoplexy : கடுவெயில் அதிர்ச்சி.

heat, prickly : வேர்க்குரு.

heat stroke : வெப்பத் தாக்குதல்; வெப்பத் தாக்கம்; வெப்ப வாதம்; வெயில் மயக்கம் : வெப்ப மயக்கத்தின் இறுதி நிலை. உடல் வெப்பத்தை இழக்க இயலாதிருக்கும் போது இத் தாக்குதல் எற்பட்டு, மரணமும் உண்டாகலாம்.

heavy chain : கனச்சங்கிலி : இரண்டு பாலிபெப்டைடு சங்கிலிகளில் ஒன்று. இது தடை காப்புப் புரதங்களின் மூலங்களுக்கும், அதன் வகையைத் தீர்மானிப்பதற்கும் அடிப்படையாக அமைந்துள்ளது.

hebephrenia : உளச்சிதைவு : முரண் மூளை நோயில் ஒரு வகை. இதனால் பொதுவாக ஆளுமை சிதைவுறுகிறது. இது திடீரெனத் தோன்றும் பெரும்பாலும் குமரப் பருவத்தினரை இது தாக்குகிறது.

hectic : எலும்புருக்கிக் காய்ச்சல்.

hedonism : இன்ப நாட்டம்; இன்பவியல் கோட்பாடு : அளவுக்கு மீறிய இன்ப நாட்டம் கொண்டிருத்தல். இந்நாட்டம் காரணமாக ஒருவர் வெறுக்கத் தக்க நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.

heel : குதுகால்.

Hegar's sign: கருப்பை கழுத்து மென்மை : கருவுற்ற தொடக்க நிலையில், கருப்பையின் கழுத்துப் பகுதி பெரிதும் மென்மையாக இருத்தல்.

heimlich's menoeuvre : குரல்வளைத் தடை நீக்கம் : குரல்வளை முகப்பினை அடைக்கின்ற, அயல் பொருளை (உ- ம்); உணவு) வெளிக்கொணர்வதற்கு மேற்கொள்ளப்படும் முதலுதவி நடவடிக்கை, ஹிம்லிக் முறை.

heliosis : வெப்பத் தாக்கம்; சூரியத் தாக்க நோய்.

heliotherapy : சூரியக்கதிர் மருத்துவம் : சூரிய ஒளிப்படிவு மூலம் நோய் தீர்க்கும் மருத்துவம்.