பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hepadnaviridae

525

hepatitis. viral


கருஞ்சிவப்புப் புள்ளிகள் கொண்ட படையிலிருந்து குருதி கசிதல். குறிப்பாக, முழங்கால் தண்டுகளிலும், பிட்டங்களிலும் இவ்வாறு இரத்தம் கசியும் இந் நோய் பெரும்பாலும் குழந்தைகளைப் பாதிக்கிறது.

hepadnaviridae : கல்லீரல் அழற்சி கிருமி : கல்லீரல் அழற்சி-B போன்ற நோய்க் கிருமிகள். டிஎன்ஏ கிருமிக் குடும்பத்தில் ஒன்று. இதனால், தொற்று நோய்கள் உண்டாகின்றன. கடுமையான நோய்க் கழலைகள் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

hepadnavirus : ஈரல் நோய்க் கிருமி : கல்லீரல் அழற்சி-B போன்ற நோய்க்கிருமிகள். இது ஈரல் உயிரணுக்களின் கருமையத்தில் பல்கிப் பெருகி, இடைவிடாது நோயை உண் டாக்குகிறது.

heparin : ஈரல் அமிலம் : ஈரல் மற்றும் நுரையீரல் திசுக்களில் உள்ள ஓர் அமிலம். இதனை நரம்பு வழியாகச் செலுத்தினால், குருதிக் கட்டுத் தடுக்கப்படுகிறது. குருதியுறைவு நோய்களைக் குணப்படுத்தப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

hepatectomy : ஈரல் அறுவை மருத்துவம்; ஈரல் பகுதி நீக்கம்; ஈரல் எடுப்பு : ஈரலை அல்லது ஈரலின் ஒரு பகுதியைத் துண்டித்து எடுத்தல்.

hepatic : ஈரல் சார்; கல்லீரல் மருந்து : கல்லீரலுக்கு நன்மை செய்யும் ஒரு வகை மருந்து.

hepatico choledochostomy : கல்லீரல்-பித்தநீர்நாள இணைப்பு; ஈரலில் பித்தக் குழல் வாயமைப்பு : கல்லீரல் மற்றும் பொதுவான பித்தநீர் நாளங்கள் துண்டுபட்டிருந்தால் அவற்றை முனைக்கு முனை இணைத்தல்.

hepaticogastrostomy : கல்லீரல் குருதிநாளப் பிணைப்பு : இரைப் பைக்குச் செல்லும் கல்லீரல் நாளத்தில் அறுவைச் சிகிச்சை மூலம் குருதி நாளப் பிணைப்பு செய்தல்.

hepatisation : திடத்திரட்சியாக்கம் : ஈரல் குலை போன்று ஒரு திடமான திரட்சியாக உரு மாற்றுதல், முக்கியமாகச் சீத சன்னியின்போது, மடல்கள் ஒன்றிணைந்து இந்தத் திரட்சி ஏற்படுகிறது.

hepatitis : ஈரல் அழற்சி; கல்லீரல் அழற்சி : நச்சுப் பொருள்கள் காரணமாக கல்லீரலில் ஏற்படும் வீக்கம். இதன் காரணமாக, காய்ச்சலும், இரைப்பை-குடல் கோளாறுகளும், தோல் அரிப்பும் ஏற்படும்.

hepatitis. viral : ஈரல் அணு அழற்சி.