பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hepatization

526

heritability


hepatization : கல்லீரல் இறுக்கம் : துரையீரல் போன்ற பகுதிகள் கல்லீரல் போன்ற பொருளாக இறுகிவிடும் நோய்.

hepatoblastoma : கல்லீரல் கட்டி : கல்லீரலில் ஏற்படும் உக்கிரமான கட்டி இது குழந்தைகளிடம் உண்டாகும். இந்தக் கட்டி, ஒற்றையாகவும், திண்மமாகவும், நன்கு முகம் வைத்த தாகவும், முதிராத திகவணுக்கள் உடையதாகவும் இருக்கும்.

hepatocirrhosis : ஈரலரிப்பு; கடின ஈரல் : ஈரல் உறுப்பின் இழைமம் இற்று இணைமங்கள் மட்டுமீறி வளர்ச்சியடையும் கோளாறு.

hepatogastric : ஈரல் சார்ந்த : ஈரற்குலை, இரைப்பை தொடர்புடைய.

'hepatogenous : கல்லீரலில் தோன்றும்.

hepatogram : ஈரற்குலை ஊடு கதிர்ப்படம் : 1. ஈரற்குலையின் ஊடுகதிர்ப் படம். 2, ஈரற்குலைத் துடிப்பினை வரைபடமாக வரைதல்.

hepatology : ஈரல் ஆய்வியல் : ஈரற்குலை பற்றியும் அதைப் பீடிக்கும் நோய்கள் குறித்தும் அறிவியல் முறையில் ஆய்வு செய்தல்.

hepatoma : ஈரல்புற்று : 1. ஈரல் குலையில் ஏற்படும் கட்டி 2. ஈரல் குலை உயிரணுப் புற்று.

hepatosis : ஈரல் அழற்சி : ஈரல் குலையில் ஏற்படும் செயல் முறைக் கோளாறு எதுவும்.

hepatomegaly : ஈரல் விரிவு; ஈரல் பெருக்கம்; பேரீரல்; ஈரல் வீக்கம் : ஈரல் சரிவடைதல்.

hepatotoxic : ஈரல் நச்சு : ஈரல் உயிரணுக்களுக்குத் தீங்க விளை விக்கும் நச்சுப் பொருள்.

herald bleed : முன்னோடிக் குருதிப்போக்கு : அடிவயிற்றில் வலியுடன் உண்டாகும் இரத்தப் போக்கு. இது கடும் குருதிப் போக்குக்கு முன்னதாக ஏற்படும்.

herald patch : முன்னோடி நைவுப்புண் :கரனைப் பொக்குளத்தின் தொடக்க நிலை நைவுப்புண். இது தனியாக, நீள்வட்ட வடிவில், செதிள் களுடன் தோன்றும் மற்ற நைவுப்புண்கள் தோன்றுவதற்கு ஒருவாரம் முன்னதாக இது உணடாகும்.

herb : மூலிகை : மருந்தாக அல்லது நறுமணப் பொருளாகப் பயன்படும் இலைத் தாவரம்.

herbívora : இலையுண்ணி.

hereditary : மரபுப் பண்பு; பாரம் பரிய; மரபியல்.

heredity : மரபுவழி; பாரம்பரியம்.

heritability : மரபுத் திறம்பாடு : பரம்பரையாக வரும் ஒரு குணம். மரபு சார் வடிவத்தினால் எந்த