பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hermaphrodite

527

herpes virus


அளவுக்கு மரபுக் குணம் பாதிக்கப் படுகிறது என்பதை அளவிடுதல்.

hermaphrodite : இருபால் இயிரினம்; இருபாலினவுடலி : பெண் கூறும் ஆண்கூறும் ஒருங்கேயுடைய உயிரினம்.

herma phroditism : இரு பாலியம்.

hernia : விரிசல்; குடலிறக்கம்; குடல் பிதுக்கம் : ஒர் உறுப்பு அல்லது ஒர் உறுப்பின் ஒரு பகுதிச் சுவர்ப் பகுதி விரிசல் வழி நீட்டிக் கொண்டிருத்தல். குடலின் ஒரு பகுதி, உடலின் முன்புறமுள்ள தசைச் சுவரின் வலுக்குறைந்த பகுதி வழியாக வெளித் தள்ளப்படுதல்.

hernia, femorol : குடல் துடையிறக்கம்.

hernia, injurinal : குடல் அறையிறக்கம்.

hernia, stranguiated : நெரிப்பிறக்கம்.

hernia, umbilical : உந்திப்பிதுக்கம்.

herniation : குடல் பிதுக்கம் : பொதியுறையில், சவ்வில், தசையில் அல்லது எலும்பில் இயற்கையாக ஏற்படும் கோளாறு அல்லது பிளவு காரணமாக ஒர் உறுப்பில் அல்லது கட்டமைப்பில் உண்டாகும் அளவுக்கு மீறிய பிதுக்கம்.

herniopiasty : குடலிறக்க அறுவை மருத்துவம்; பிதுக்க ஒட்டறுவை மருத்துவம்; குடலிறக்க திருத்தமைப்பு : குடலிறக்கத்தை அகற்றுவதற்கான அறுவைச் சிகிச்சை.

'herniorrhaphy : குடலிறக்க வலுவூட்டம்; பிதுக்கத் தைப்பு : குடலிறக்க நோயில், நலிவாகவுள்ள பகுதியை நோயாளியின் சொந்த திசுக்களைக் கொண்டு வலுப்படுத்துவதற்குச் செய்யப்படும் அறுவை மருத்துவம்.

herniotome : குடலிறக்க அறுவைக் கத்தி; பிதுக்க வெட்டி : குடலிறக்க அறுவை மருத்துவர்களால் பயன்படுத்தப்படும் ஒரு தனி வகைக் கத்தி.

herniotomy : குடலிறக்க உட்பை அகற்றல்; பிதுக்க நீக்கம் : குடலி றக்க உட்பையினை அகற்றி விட்டு அதன் உள்ளடக்கப்பொருள்களை இயல்பு நிலைக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான அறுவை மருத்துவம்.

herpes : அக்கி.

herpes, labialis : உதட்டு அக்கி.

herpes, simplex : சிற்றக்கி.

herpes, zostev : அக்கி அம்மை.

herpes virus : தேமல் கிருமி : டிஎன்ஏ கிருமிக் குழுமத்தில் ஒன்று. இதில் எளிய தேமல், படர் தேமல், தட்டம்மை கிருமிகள், எப்ஸ்டீன்-பார்