பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

heroin

528

heterom orphosis


கிருமி உயிர் நுண்மக் கிருமி போன்ற செயல் தூண்ட நுண்ணுயிர்கள் அடங்கும்.

heroin (hern) : தீவிர மருந்து : மயக்க மருந்திலிருந்து உண்டாக் கப்படும் ஒருவகை மருந்து. மருந்தடிமைப் பழக்கத்தை உண்டாக்கக் கூடியது. சட்டத்தில் தடை செய்யப்பட்டது.

herpangina : அண்ணக் கொப்புளம்; அக்கி நெறிப்பு : முது கெலும்புடையவற்றின் மேல் வாயின் (அண்ணம்) பின் புறத்திலுள்ள மிக நுண்ணிய கொப்புளங்கள் மற்றும் புண்கள்.

herpes : தேமல்; படர்தாமரை : தோலில் ஏற்படும் ஒருவகை வைரஸ் நோய். இது ஒரு தொற்று நோய்; பாலுறுப்பு காரணமாகப் பெண்களுக்கு யோனிக் குழாய், பெண்குறி இதழ்கள் ஆகியவற்றில் உண் டாகும். ஆண்களுககு ஆண் குறியிலும் ஏற்படும். இது இரு வகைப்படும். ஒன்று, சாதாரணம். மற்றொன்று, சின்னம்மைக் கிருமியால் ஏற்படுவது.

herpetic : படர்தேமல்லான.

hesperidin : எலுமிச்சைப் பொருள் : பெரும்பாலான எலுமிச்சை வகைகளில் உள்ள படிகம் போன்ற பொருள். இது எலுமிச்சைச் சாறு போன்று செயற்படக் கூடியது.

heteroantibody : முரணிய தற்காப்பு மூலம் : காப்பு மூலம் தொடர்பான தாறுமாறான தற்காப்பு மூலம்.

heteroantigen : தாறுமாறு காப்பு மூலம் : ஒர் இனத்திலிருந்து இன் னொரு இனத்தில் நேரிணையான தற்காப்பு மூலத்தை உற்பத்தி செய்கிற ஒரு காப்பு மூலம்.

heteroblastic : முரணிய திசு வகை : ஒன்றுக்கு மேற்பட்ட திசுவகையிலிருந்து வளர்கிற ஒன்று.

heterodermic : மாற்று ஒட்டுத் தோல் : மற்றொரு இனத்தின் தனி வகையிலிருந்ததான ஒரு ஒட்டுத்தோல் தொடர்பான.

heterolysis : முரணிய சீரணம் : ஒர் இனத்தின் உயிரணுக்களை வேறொரு இனத்தின் லைசின் மூலம் கரைத்தல் அல்லது சீரணித்தல்,

heterogeneous : வேறின; பலவின.

heterometaplasia : அயல்திசு உற்பத்தி : திசு உருமாற்றம். இதன் மூலம், திசு எந்தப் பகுதியில் உற்பத்தியாகிறதோ அந்தப் பகுதிக்கு அன்னியமான ஒரு திசு உற்பத்தியாகிறது.

heteromorphosis : அயல்திசு வளர்ச்சி : வேறொருவகைத் திசு விலிருந்து ஒரு திசு வளர்தல்.