பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

achondroplasia

52

acid


achondroplasia : எலும்பு வளர்ச்சித் தடை; குறுத்து வளராமை : நீண்ட எலும்புகளின் வளர்ச்சி தடைபட்டு, பெரிய தலையும் குறுகிய உறுப்புகளும் கொண்ட குள்ள உருவம் உருவாதல், இது பரம்பரையாக வரும் ஒரு பண்பு. இதில் அறிவுத்திறன் பாதிக்கப்படுவதில்லை. பாரம் பரியப் பண்பு மேலோங்கி இருக்கிறது.

achroma : இயல்பு நிறமின்மை :

achromasia : இயல்பு நிறமின்மை : தோலின் இயல்பு நிறம் இல்லாதிருத்தல். தோல் அணுக்கள் நிறமேற்பதில் பாதிப்பு உண்டாதல்.

achromate : நிறக்குருடு; நிறப்பார்வையின்மை : நிறங்களைப் பிரித்துணர இயலாமை.

achromatic : நிறமிலா : (1) நிறமின்மை, (2) குரோமேட்டின் எனும் நிறமி இல்லாத நிலைமை. (3) வண்ணமேற்பதில் இடர்பாடு, (4) ஒளிச்சிதறலில் இடர்பாடு.

achromatin : நிறமற்ற அணு : அணுவின் உட்கரு நிறமற்றிருத்தல்.

achromatism : நிறமின்மை.

achromatopsia : நிறக்குருடு; நிறப் பார்வையின்மை : வண்ணங்களை முழுமையாக அடையாளங்காண இயலாதிருத்தல். இந்நோய் பிடித்தவர்களுக்கு ஒரே நிறம் மட்டுமே கண்ணுக்குப் புலனாகும்.

achromia : நிறமற்ற : (1) நிறமில்லாதிருத்தல் அல்லது வெளிறி யிருத்தல். (2) அணுக்கள் நிற மேற்பதில் சிரமப்படுதல்.

achromycin : அக்ரோமைசின் : 'டெட்ரோசைக்கிளின்' என்ற மருந்தின் வாணிக உரிமைப் பெயர்.

achylia : உணவுப்பால் இன்மை; சாறின்மை; பித்தநீரின்மை : உடலில் உணவிலிருந்து ஊறும் கொழுப்புக் கலந்த வெள்ளை நிணநீர் இல்லாதிருத்தல்.

achylia-gastrica : இரைப்பை சுரப்பின்மை.

achylous : பித்தநீரின்மை : செரிமானச் சுரப்பு நீர்க் குறைபாடு.

acicular : ஊசி போன்ற வடிவமுள்ள அமிலம். ஹைட்ரஜன் அயனிகளைக் கரைகளில் வெளியிடும் ஒரு பொருள்.

acid : புளியம்; அமிலம் (காடிப் பொருள்); திராவகம் : கரைசல்களில் ஹைட்ரஜன் அயனிகள்அளவுக்கு மேல் உண்டாக்கக் கூடிய பொருள் எதனையும் இது குறிக்கும். இது, நீல