பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hexyiresorcinol

530

hindgut


hexyiresorcinol : ஹெக்சிர்ரிசோர்சினால் : கீரைப்பூச்சி, வட்டப்பூச்சி, கொக்கிப்புழு, குடற்புழு ஆகியவற்றுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் மருந்து.

hiatus : பிளவு; இடைவாய்.

Hibb's operation : ஹிப் அறுவை மருத்துவம் : முதுகந்தண்டுக் காச நோயினையொட்டி, முதுகந் தண்டுக்கூட்டிணைவு செய்வதற்கான அறுவை மருத்துவம்.

hibernation : அரிதுயில் : 1. தனிமையில் வாழ்தல், 2. குளிர் காலத்தில் உடல் வெப்பத்தையும் வளர்சிதை மாற்றத்தையும் வெகுவாகக் குறைத்துக் கொண்டு அரிதுயிலில் ஆழ்ந்திருத்தல். 3. செயற்பாடுகளைத் தற்காலிக மாக்க குறைத்துக் கொள்ளுதல்.

hibernoma : அரிதுயில் கட்டி : நோய்க்குறியுடன் வட்ட வடிவில் அரிதாக உண்டாகும் ஒர் உக்கிரமற்ற கட்டி இதில் சில அரிதுயில் விலங்குகளிடம் உள்ள கொழுப்புப் போன்ற பழுப்புக் கொழுப்பு அடங்கி யிருக்கும்.

Hibiscrub : ஹிபிஸ்கிரப் : அறுவை மருத்துவத்துக்கு முன்னர் கழுவு வதற்காகப் பயன்படுத்தப்படும் மருந்தின் வணிகப் பெயர். இது, 4% சவர்க்காரக் கரைசலில் கலந்த குளோர்ஹெக்சிடின் குளுக்கோனேட் ஆகும்.

Hibitane : ஹிபிட்டேன் : குளோர்ஹெக்சிடின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

hiccough : விக்கல் ; குரல்வளை முகப்பு திடீரென அடைத்துக் கொள்வதால், சுவாச உறுப்புகளில் விக்கல் ஒலியுடன் தன்னையறியாமல் ஏற்படும் துடிப்பு.

hidradenoma : வியர்வைச் சுரப்பிக் கட்டி : வியர்வைச் சுரப்பிகளின் புறத்தோல் உயிரணுக்களில் உண்டாகும் உக்கிரமற்ற கட்டி.

hidroacanthoma : எக்ரின் சுரப்பி கட்டி : எக்ளின் சுரப்பியில் உண்டாகும் உக்கிரமற்ற கட்டி.

hidrosis : வியர்வைச் சுரப்பு; வியர்த்தல்.

hilum : உள்வாய்ப் பள்ளம் : நாடி நரம்புக் குழாய்கள் உறுப்பினுள் நுழையும் உள்வாய்ப் பள்ளம்.

hind brain : பின் மூளை : மூளையின் கடைகோடிப் பின் பகுதி. இதிலிருந்து சிறுமூளை, முகுளம், பின் மூளை உண்டாகும்.

hind foot : பின்பாதம் : பாதத்தின் பின் பகுதி. இதில் கணுக்கால், பாத எலும்பு ஆகியவை அடங்கும்.

hindgut : பின்புற உணவுக் குழாய் : உணவுக் குழாயின் பின்பகுதி.