பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

histoclinical

history,personal


histoclinical : திகவியல் பிறழ்வு மருத்துவம் : மருத்துவ அம்சங் களுடன் திகவியல் இயல்புப் பிறழ்ச்சியை இணைத்தல்.

histogenesis : கருமுனை உயிரணு வளர்ச்சி : கருமுனையின் நுண்ணுயிர்ப் படுகைகளின் வேறுபடுத்தப்படாத உயிரணுக்களிலிருந்து திசுக்கள் உருவாகி வளர்தல்.

histogram : அலைவெண் வரைபடம் : அலைவெண் பகிர்மானத்தின் வரைபடம். இது, செங்குத்துப் பட்டைகள் அல்லது செவ்வகங்கள் மூலம் குறிக்கப் படுகிறது.

histoid : திசு ஒத்திசைவு : உடலிலுள்ள திசுக்களில் ஒன்றின் கட்டமைப்பு ஒத்திருக்கிறது.

histology : திசுவியல்; உயிர்தசைவியல்; நுண்உடற் கூறியியல் : உயிர்த்திசுக்கள் பற்றிய நுண்ணாய்வியல்.

Histolysis : திசுச்சிதைவு; திசு முறிவு : கரிமத் திசுக்கள் சிதை வுறுதல்.

histones : ஹிஸ்டோன் : உயர் உயிரிகளின் இனக்கீற்று டி.என்.ஏ யுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு தனிவகைப்புரதம்.

histopathology : திசுநோயியல் : திசு உயிரணுக்களைப் பாதிக்கிற நோய்களை ஆராய்தல்.

histophysiology : திசு நுண்ணாய்வு : திசுக்களை அவற்றின் செயற்பாடுகளுடன் ஒப்பிட்டு நுண்ணாய்வு செய்தல்'

Histoplasma : திசு அழற்சிக் கிருமி : H-கேப்கலேட்டம் என்ற பூஞ்சண வகை திசு அழற்சியை உண்டாக்குகிறது. இது இயற்கையில் பூஞ்சண வடிவிலும், மனித உடல் வெப்ப நிலையில் நொதி வடிவிலும் அமைந் திருக்கிறது.

histoplasmosis : திசுஅழற்சி நோய் : H-கேப்சுலேட்டம் என்ற கிருமியினால் உண்டாகும் நோய். இது, வெப்ப மண்டலங்களிலும், குறிப்பாக மத்திய அமெரிக்காவில் ஆற்று வடிகால்களில் பறவைகளின் மலக்கழிவுகளினால் மாசுபட்ட ஈர மண்ணிலிருந்து உண்டாகிறது. இது கடுமையான திசு அழற்சியில் ஏற்படுகிறது.

history : வரலாறு; வண்ணனை; விவரியம்.

history, clinical : நோய் விவரியம்.

history, dietetic : உணவு விவரியம்.

history, family : குடும்பவிவரியம்.

history, menatrual : போக்கு விவரியம்.

history obstetric : பேற்று விவரியம்.

history, personal : தன் விவரியம்.