பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

history, social

533

holoacardius


history, social : சூழ்விவரியம்; சார்பியம்.

history of medicine : மருத்துவ வரலாறு; மருத்துவ விவரியம்.

history of part illness : முன்நோய் விவரியம்.

history of present illness : நோய் விவரியம்.

history taking : விவரிய கணிப்பு.

HIV : எச்ஐவி (மனித நோய்த்தடை காப்புக் குறைபாட்டு நோய்க் கிருமி) : 'எயிட்ஸ்' எனப்படும் ஏமக் குறைவு நோய்க்கு மூலகாரணமான நோய்க் கிருமி.

hives : தோல் வீக்கம்; தோல் அரிப்பு : படைநோய் குடல் வீக்கம்; தொண்டைஅழற்சி.

HLA : எச் எல் ஏ : மனித வெள்ளை உயிரணு காப்பு மூலம் (Human Leucocytic Antigen) என்பதன் சுருக்கம்.

hoar : மூப்பு; முதிர் தோற்றம்.

hoars : குரல் கரகரப்பு; கம்மிய.

hoary : நரையுடைய மூப்புடைய.

hobnail liver : திரள் ஈரல்; ஆரல் கரணை : ஈரலறிப்பு நோயில் காணப்படும் திண்மையான ஈரல்.

Hodgkin's disease : ஹாட்ஜ்கின் நோய் : நிணநீர்க்கரணைகள் படிப்படியாக விரிவடைகிற கேடு விளைவிக்கக்கூடிய கட்டி.

Hoffmann's sign : ஹாஃப்மன் குறியீடு : நடுவிரலின் நகம் திடீரென, வலுகட்டாயமாகச் சுண்டி இழுக்கப்படுவதால் ஏற்படும் இயல்புக்கு மீறிய எதிர்வினை. இதனால், கட்டை விரலிலும், நடுவிரலிலும் மற்ற விரல்களில் ஒன்றின் முனை கோடி விரல் எலும்புகளிலும் திடீர் எதிர்வினை ஏற்படும். இதனை, ஜெர்மன் நரம்பியல் வல்லுநர் ரூஜாகான் ஹாஃப் மன் விளக்கிக் கூறினார்.

Hogben test : ஹாக் பென் சோதனை (கருச்சோதனை : பெண் கருவுற்றிருக்கிறாளா என்பதை அறிய நடத்தப்படும் சோதனை கருவுற்றிருப்பதாகக் கருதப்படும் பெண்ணின் அதிகாலைச் சிறுநீரை, ஒரு பெண் தேரைக்கு ஊசி மூலம் செலுத்தப்படும். பெண் கருவுற்றிருந்தால் அந்தத் தேரை 2-24 மணி நேரத்தில் முட்டையிலும். இச்சோதனை 99% துல்லியமானது.

Holdswath test : ஹோல்ட்ஸ்வாத் சோதனை : எலும்புகளுக் கிடையிலான இடைவெளியில் ஒரு பிளவு இருப்பதைக் கண்டறியும் சோதனை. எலும்புகளுக்கிடையிலான இணைப்பிழை நலிந்து போவதால் நிலையற்ற முறிவு ஏற்பட்டிருப்பதை இச்சோதனை குறிக்கிறது.

holoacardius : ஒரு ஒற்றைப் பாலணு இரட்டை முதிர்கரு : ஒரு