பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

holoenzyme

534

home othermy


தனியான, மிகவும் குறைபாடுடைய ஒற்றைப் பாலணு இரட்டை முதிர்கரு இது, வடிவமில்லாத, உருவமற்ற பொருண்மையுடன், இதயமில்லாமல் காணப்படுகிறது.

holoenzyme : ஒற்றைச் செரிமானப் பொருள் : முழுமையான இயல்பூக்க நடவடிக்கையைக் கொடுக்கும் ஒர் இணைச் செரிமானப் பொருள், திசுப்பட்டை செரிமானப் பொருள் இவற்றின் ஒரு கலவையினால் உருவான ஒரு பொருள்.

holography : முப்பரிமாண உருவரை : கதழ் ஒலிச் சாதனத்துடன் முப்பரிமாண உருக் காட்சிகளை உருவாக்கும் ஒரு முறை.

Holter monitor : ஹோல்ட்டர் கண் காணிப்புச் சாதனம் : ஈ.சி.ஜி வரைவினைப் பதிவு செய்யும் ஒரு சாதனம்; அல்லது கையடக்க நாடாப்பதிப்பான். நோயாளி இயல்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும்போது இது செய்யப்படுகிறது. அமெரிக்க உயிரியலறிஞர் நார்மன் ஹோல்ஸ்டர் இதனைத் தயாரித்தார்.

homaluria : இயல்பு சிறுநீர் சுரப்பு : இயல்பான வீதத்தில் சிறுநீர் உற்பத்தியாகி, வெளியேறுதல்.

Homan's sign : ஹோமன் நோய்க்குறி : கால் விரல் வளைவு காரண மாக, பின்கால் தசைப்பகுதியில் வலி ஏற்படுதல்.

home : வீடு, மனை.

home, nursing : மருத்துவ இல்லம், மருத்துவமனை.

homeopathy : இனமுறை மருத்துவம் (ஹோமியோபதி) : நோய்க் கூற்றுப் பெருக்கத்தால் நோய் நீக்கும் முறை. இதனை ஜெர்மன் மருத்துவ அறிஞர் ஹானிமன் கண்டுபிடித்தார். நோயினால் உண்டாகும் அதே அறிகுறிகளை உண்டாக்கும் மருந்துகளை நோயாளிக்குச் சிறிதளவு கொடுத்து அதன் மூலம் நோய் நீக்கும் மருத்துவ முறை. எடுத்துக்காட்டாக வேணற்கட்டியை உண்டாக்கும் ஒரு மருந்தினை உடலில் செலுத்துவதன் மூலம் வேணற்கட்டிைைய குணமாக்கல்.

homeoplasia : புதுத்திசு உருவாக்கம் : உறுப்பின் இயல்பான திசுவைப் போன்று புதிய திக உருவாதல்.

homeostasis : சமநிலை பேணல்; நீர்ச் சமநிலை; உட்சீர்மை : குருதி அழுத்தம், உடல் வெப்பம், மின்னழுத்தம் போன்ற இயக்கங்கள் சீராக நடைபெறுமாறு செய்தல்

home othermy : சமநிலை வெப்பம் பேணல் : சுற்றுச் சூழல் வெப்பநிலை மாறிய போதிலும் உடல் வெப்பநிலை மாறாமல் பேணிவருதல்.