பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

horizontal

537

hourglass contraction


சார்புப் பின்னடைவு சோதனையின் போது சோதனை செய்பவர் கையால் அழுத்தி ஆழமாக மூச்சிழுக்கும்படி செய்து இதனை உணர்ந்தறிகிறார். அமெரிக்க மருத்துவ அறிஞர் சார்லஸ் ஹஇவர் பெயரால் அழைக்கப்படுகிறது.

horizontal : கிடைக்கோடு; நிலைக் கோடு.

hormone : இயக்குநீர் (ஹார் மோன் : குருதியில் கலந்து உறுப்புகளைச் செயற்படத் தூண்டும் உட்சுரப்பு நீர்.

Horner's syndrome : ஹார்னர் நோய் : கழுத்து சார்ந்த பரிவு நரம்பின் நடுப்பகுதியில் ஏற்படும் வாதம் காரணமாக முகத்தின் ஒரு பக்கத்தில் இமைத்தொய்வு, இயக்கமாற்றம், கண்விழிச் சுருக்கம், வியர்வையின்மை ஆகியவை உண்டாகும். சுவிஸ் கண்ணியல் வல்லுநர் ஜோகான் ஹோர்னர் பெயரால் அழைக்கப் படுகிறது.

horny layer : மேல் தோல் படலம் : உண்மைத் தோலை அல்லது உட்தோலைப்பாது காக்கிற உணர்வுற்ற புறத்தோல் படலம் அல்லது தோல் மேலடுக்கு.

Horton syndrome : கடுந்தலைவலி : உடலில் ஹிஸ்டாமின் சுரத்தல் காரணமாக ஏற்படும் கடுமையான தலைவலி. இது ஒற்றைத் தலைவலியிலிருந்து வேறுபட்டது.

hospital : மருத்துவமனை; மருந்து நிலையம்; நோய்மனை : நோயா ளிகளைக் கவனித்துக் குணப்படுத்தும் ஒரு நிலவரம்.

hospital. infectious diseases : தொற்றுநோய் மருத்துவமனை.

hospital, leprosy : தொழுநோய் மனை.

hospital, maternity : மகப்பேறு மருத்துவமனை; மகப்பேறு மனை.

hospital, mental : மனநல மருத்தவ மனை; மனநல மனை.

host : ஒட்டுண்ணித் தாய் உயிர்; ஒட்டயிர்; தருநர் : ஒட்டுண்ணி உயிர்களுக்கு ஆதாரமாக உள்ள தாய்ப் பிராணிகள். விருந்தோம்பும் உயிர்.

hot dog headache : சூட்டுத் தலைவலி : உணவு உண்டபின் சோடியம் நைட்ரேட் அதிகமாவதால் உண்டாகும் சூட்டுத் தலைவலி.

hot flush : வெப்ப உணர்வூட்டம் : முகம், கழுத்து, மார்பு ஆகி யவை செம்மையடைதல். கடும் வெப்ப உணர்வு, வியர்வை ஆகியவை இதனால் உண்டாகிறது.

hourglass contraction : நாழிகை வட்டில் சுருக்கம் : இரைப்பை, கருப்பை போன்ற உட்புழையுள்ள உறுப்புகளின் மத்தியில் வடு ஏற்பட்டு அதனை இருபகுதிகளாகப் பிரிக்கும் மணல் நாழிகை வட்டில் போன்ற வட்டவடிவமான சுருக்கம்.