பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

acidaemia

53

acidism


லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுகிறது. இதனை ஒரு காரத்தினால் செயலற்றதாக்கிவிடலாம். அப்போது ஓர் உப்பு உண்டாகும். இவ்விரு சோதனைகள் மூலம் இதனை அடையாளம் காணலாம்.

acidaemia : அமில மிகைப்பு; அமிலப் பெருக்க நோய் அமில ரத்தம் : இரத்தத்தின் அளவுக்கு மீறிய அமிலத்தன்மை. இதனால், ஹைட்ரஜன் அயனிகள், இயல்புக்குக் குறைந்த PH அளவில் உண்டாகின்றன. காற்றோட்டக் குறைபாடு, கார்பன்-டை-ஆக்சைடு பெருக்கம் காரணமாக இது உண்டாகும்போது இதனை ‘சுவாச அமிலப் பெருக்கம்’ என்பர். தசைகளில் லாக்டிக் அமிலம் என்ற காடிப் பொருள் அதிகரிப்பினால் இது உண்டாகும். ஆனால், அது 'வளர்சிதை மாற்ற அமிலப் பெருக்கம்' என்று கூறப்படும்.

acidaemia : குருதி அமில மிகைப்பு : இரத்தத்தில் அமிலத்தன்மை அதிகப்படுதல். ஹைட்ரஜன் அயனிகளின் எண்ணிக்கை இரத்தத்தில் அதிகப்படுதல் அல்லது இரத்தத்தின் pH அளவு இயல்பு அளவிலிருந்து குறைவது.

acidalcohoifast : அமில-ஆல்ககால் எதிர்ப்பு : பாக்டீரியாவியலில் ஒர் உயிரி மாசுபடும் போது, ஆல்ககாலினாலும், அமிலத்தாலும், அது நிறமிழப்பதற்கு எதிர்ப்பு உண்டாகிறது.

acid-base : அமில-கார.

acid-base balance : அமில-உப்பு மூலச் சமநிலை; அமிலக் காரச் சமன்பாடு : இரத்தத்திலும் உடல் நீர்மங்களிலும் அமிலத்திற்கு உப்பு மூலங்களுக்கு மிடையில் சமநிலை நிலவுதல்.

acid-base equilibrium : அமில-கார நடுநிலை.

acid-base titration : அமில-கார தரப்படுத்தம்.

acid burn : அமிலச் சுடுமண்.

acidemia : அமிலமிகை.

'acid fast : அமில எதிர்ப்பு; அமிலத்தில கரையா; அமிலம் ஏற்கா : பாக்டீரியாவியலில், ஒர் உயிரி மாசுபடும்போது, நீர்த்த அமிலங்கள் பட்டால் நிறம் மாறாமலிருத்தல்.

acidhaematin : அமிலமாட்டின்.

acidfication : அமிலமாக்கல்; அமிலப்படுத்தல் : அமிலமாக மாறுதல்.

acidfier : அமிலமாக்கி; அமிலமளிப்பான் : அமிலமாக மாற்றும் ஒரு பொருள்.

acidism : அமிலமேற்றல்.