பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Hutchinson's teeth

540

hydrogogue


ஒரு மரபணுக் கோளாறு. ஜெர்மன் குழந்தை மருத்துவ அறிஞர் ஜெர்ட்ராட்ஹர்லர் பெயரால் அழைக்கப்படுகிறது.

Hutchinson's teeth : உளிப்பல் அகற்சி : மேல் உளிப் பல்லின் எகிற்று முனையான வெட்டு முனையை விட அகன்றிருக்கும் கோளாறு.

Hyalase : ஹையாலேஸ் : ஹையாலுரோனிடேஸ் என்னும் மருந்தின் வணிகப் பெயர்.

hyaline : படிக நிறப்பரப்பு : ஒளி புகும் பளிங்கு தெள்ளி இணைப்புத் திசுக்கள் சிதைவுற்று, கண்ணாடி போன்று ஒளி ஊடுருவும் தன்மையுடையதாகும்.

hyalitis : கண்படல அழற்சி; விழி நீர்ம அழற்சி : கண்ணின் மேற்படலத்தில் ஏற்படும் வீக்கம்.

hyaloid : கண்ணாடிப் படலம் : கண்ணின் கண்ணாடித் தாள் போன்ற புறப்படலம்.

hyaloid membrane : கண்மேற்படலம்.

hyaioplasm : ஒரணு ஊனிர்த் திரவம் : உயிரணுவின் ஒரணு ஊனிர்த் திரவம்.

hyalosome : உயிரணு உட்கரு மையம் : உயிரணுவின் கருமையத் தினுள் உள்ள முட்டை வடிவ அல்லது வட்டவடிவ கட்டமைவு: இது இலேசாக நிறம் மங்கி இருக்கும்.

hybrid : இனக்கலப்பு; ஒட்டு : இரு வெவ்வேறு இனங்களிலிருந்து உருவாக்கப்படும் பிராணி அல்லது தாவரம்.

hybridisation : கலப்பின உறுவாக்கம் : 1. டிஎன்ஏ அல்லது ஆர்என்ஏ குறை நிரப்பு இணையாக்கம். 2. ஒற்றைச் சர நியூக்ளிக் அமிலத்தை அடையாளங்காணல். அதே அமைப்புடைய அல்லது ஏறத்தாழ அதே அமைப்புடைய, பெயரிடப்பட்ட சரத்தை இணைத்து இவ்வாறு செய்யப்படுகிறது.

hibridoma : ஹிப்டோமா : ஒன்றுக்கொன்று சார்ந்துள்ள வளர்சிதை மாற்றச் செயல் முறையுடைய இரு உயிரணுக்களிலிருந்து தோன்றும் ஒரு கட்டி உயிரணுவரிசை. பெருமளவு தற்காப்பு மூலத்தை உற்பத்தி செய்யும் ஒர் இயல்பான சுண்டெலி உயிரணு வரிசையினால் உருவாக்கப்படுகிறது.

hydrogogue : நீரகற்று நீர்மம் : நீர் போன்ற நீர்மம் வெளியேறத் தூண்டுகிறது இது குடலில் நீர்மத்தை இருத்தி வைக்கிற பேதி, மருந்துகளைக் குறிக்கிறது. இது நீர்க்கோவை நீர்மத்தை அகற்ற உதவுகிறது.