பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hydrocephalus

542

hydrometry


hydrocephalus : மூளை நீர்க் கோவை; மூளை நீர் மிகைப்பு; நீர் கபாலம்; தலைநீர் தேக்க நோய் : தலையில் நீர் தங்குவதால் ஏற்படும் கோளாறு. மண்டையோட்டினுள் மூளைத் தண்டு வட நீர் அளவுக்க அதிகமாகத் தங்குவதால் இது உண்டாகிறது.

hydrochloric acid : ஹைட்ரோகுளோரிக் அமிலம் : இரைப்பை உயிரணுக்களில் சுரக்கும் அமிலம். 0.2% வலிவுள்ள அமிலமாகக் கலந்துள்ளது.

hydrochlorothiazide : ஹைட்ரோகுளோரோதையாசிட் : சிறுநீர்க் கழிவினைத் தூண்டும் மருந்து.

hydrocortisone : ஹைட்ரோகார்ட்டிசோன் : அண்ணீரகப் புறணியிலிருந்து சுரக்கும் இரு முக்கியமான குளுக்கோ கார்ட்டி காய்டுகளில் ஒன்று.

hydrocyanic acid : ஹைட்ரோ சயனிக் அமிலம் : இதனை நீர் சயனிக் அமிலம் என்றும் கூறுவர். இது 2% நீர்த்த அமிலம் இது வயிற்றுவலி அகற்றும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனை அதிக அளவில் உட் கொண்டாலும் ஆவியை உறிஞ்சினாலும் ஆபத்து ஏற்படும். மரணமும் விளையக் கூடும்.

hydrocytosis : சிவப்பணு வீக்கம் : குடும்ப நோயாக வரும் குருதிச் சோகை நோய். இதில் சவ்வுக் கோளாறு, நீர்க்கசிவு காரணமாக சிவப்பணுக்கள் வீக்கம் அடையும்.

hydrodissection : நீர்மச்செலுத்தம் : கண்புரை அறுவைச் சிகிச்சையின் போது பிளப்பாய்வுக்காகக் கண்வில்லையின் பொதியுறையினுள் நீர்மத்தை ஊசி மூலம் செலுத்துதல்.

hydrogen : ஹைட்ரஜன் நீர்வாயு); நீர்வளி : நிறமற்ற, மணமற்ற எளிதில் தீப்பற்றக்கூடிய வாயு. இது எடைமானத்தில் மிகக் குறைந்த தனிமம். இது, நீரில் மூன்றில் இரண்டு பங்கு அடங்கியுள்ளது.

hydrogen bomb : நீர்வாயுக் குண்டு : நீரகச் சேர்மம் செறியப் பெற்று உள்ளமைந்த அணு குண்டினால் ஹைட்ரஜன் கதிரகமாக மாற்றப்படுவதன் மூலம் பெரு விசையாற்றலை வெளிப்படுத்தும் குண்டுவகை.

hydrolysis : நீரால் பகுத்தல் : நீர் இயல்பின் துணை கொண்டு நீர்கலந்த சேர்மத்தில் நீர்க்கூறு சேர்மக் கூறுகள் சிதைவுற்றுக் கூறுபடும் நிலை.

hydromania : நீர்ப் பேரார்வம்.

hydrometer : நீர்ம எடைமானி : நீர்ம எடைமான ஒப்பீட்டளவைக் காட்டும் கருவி.

hydrometry : வீத எடைமான அளவீடு : நீர்ம எடைமானி மூலம் வீத எடைமானத்தை அளவிடுதல்.