பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hydronephrosis

543

hydrotherapeutic


hydronephrosis : நீர் நீரகம்.

hydropathic : நீர் மருத்தவமனை : நீர் மருத்தவ முறைக்குரிய தனி வசதிகளையுடைய மருந்தகம்.

hydropathist : நீர் மருத்தவர் : மூளை நீர் கோர்வை மருத்துவ முறை பற்றி கற்றவர்.

hydropathy : நீர் மருத்தவ முறை : அகப்புற நிலைகளில் நீரைப் பயன்படுத்தி நோய் குணப்படுத்தும் மருத்துவ முறை.

hydropericarditis : குலையுறை அழற்சி : நெஞ்சுப்பையை மூடிக் கொண்டிருக்கும் சவ்வு வீங்கி, நீர் வழிதல்.

hydropericardium : குலையுறை நீர்; நீர் இதயப்பை : குலையுறை யில் வீக்கமில்லாமலே திரவம் சேர்ந்திருத்தல். இது இதயமும் சிறுநீரகமும் செயலிழக்கும் போது உண்டாகும்.

hydrophobia : நீர் வெறுப்பு நோய்; நீர் அச்சம்; நீர் மருட்சி.

hydrophylic : நீர் வேட்கை : அளவுக்கு மீறி நீர் அருந்தும் விருப்பு உண்டாதல்.

hydropic : நீர் கோவைக் கோளாறு.

hydropneumopericardium : குலையுறைக் காற்று : இதயத்தைச் சுற்றியுள்ள குலையுறைச் சவ்வில் காற்றும் நீர்மமும் சேர்ந்ததிருத்தல்

hydropenumoperitoneum : வபை வாயு : அடிவயிற்று உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப் பையில் (வபை) நீர்மமும் வாயுவும் சேர்ந்திருத்தல்.

hydropneumothorax : மார்புக் குழித் திரவம்; நீர்வளி மார்பகம் : மார்புவரிக் குழியில் திரவம் கசிந்து நெஞ்சுக் கூட்டில் ஏற்படும் கோளாறு.

hydrops : இழைம அழற்சி; நீர்க் கட்டு; நீர்க்கோவை : இழைமங் களின் நீர்க்கோவை.

hydropsy : மகோதரம் : நீர்க் கோவை நோய்.

hydrosalpinx : கருக்குழாய் விரிவாக்கம்; நீர் அண்டக் குழல் : மனிதக் கருப்பையிலிருந்து கரு வெளியேறும் குழாய்நீர் கோர்த்து உண்டாகும் விரிவாக்கம்.

hydrosaluric : ஹைட்ரோசலூரிக் : ஹைட்ரோகுளோரோத்தியா சைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

hydrostatic : நிலை நீர்மம் சார்ந்த : சமநிலையிலுள்ள நீர்மங்களின் அழுத்தம் அல்லது அவற்றின் குணங்கள் தொடர்புடைய.

hydrotaxis : நீர்ம இயக்கம் : நீரைப் பொறுத்து உயிரணுக்களின் அல்லது உயிரிகளின் இயக்கம்.

hydrotherapeutic : நீர் மருத்துவமுறை குறித்த.