பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hyperequilibrium

548

hyperinsulinism


எலும்பு மச்சையில் சிவப்பூதாச் சாய உயிரணு மிகுதியாக இருத்தல். இதில் இதயம், தோல், தசை, துரையீரல், குடல் ஆகியவற்றில் முற்றிய சிவப்பூதா உயிரணு ஊடுருவி இருக்கும்.

hyperequilibrium : மிகைத்தலை சுற்றல் : மிகச் சிறிதளவு இயக் கத்தின்போதுகூடத் தலை சுற்றல் அதிகமாக இருக்கும் போக்கு.

hyperextension : மிகை நீட்சி; அதிநீட்டம்.

hyperextension injury : மிகை நீட்சிக்காயம் : ஒரு மூட்டு அதன் இயல்பான வரம்புகளைத் தாண்டி நீட்சியடைவதால் உண்டாகும் ஒரு காயம்.

hyper flexion : மிகை வளைவு; மிகை மடங்கு; அதிமடக்கம் : உறுப்பு அளவுக்கு மீறி வளைந்திருத்தல்.

hyperfractionation : கதிர்வீச்சுச் சிகிச்சை : ஒருவகைக் கதிர் வீச்சுச் சிகிச்சை முறை. இதில், பக்க விளைவுகளை இயன்ற அளவு குறைப்பதற்காக, ஒவ்வொரு ஒளிபடு நிலையின் போதும், ஒளிக்கதிர் அளவு குறைக்கப்படுகிறது.

hypergenesis : மிகை உறுப்பு வளர்ச்சி : உடலின் பகுதி அல்லது உறுப்புகள் அளவுக்கு மீறி வளர்ந்திருத்தல்.

hyperglycaemia : குருதியில் மிகைச் சர்க்கரை; அதி சர்க்கரைக் குருதி : குருதியில் சர்க்கரை அளவுக்கு அதிகமாக இருத்தல். இது நீரிழிவு நோயைக் குறிக்கும்.

hyperglycinaemia : மிகைக் கிளைசின் : நிணநீரில் அளவுக்கு மிகுதியாக கிளைசின் இருத்தல், இதனால், இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக அமிலம் உண்டாகும், மனவளர்ச்சியும் குன்றும்.

hyperhidrosis : மிகை வியர்வை; வியர்வை மிகைப்பு : உள்ளங்கை களில் வியர்வை அளவுக்கு அதிகமாகச் சுரத்தல்.

hypermetropia : தூரப்பார்வை; தொலைப்பார்வை.

hyperimmune : மிகைதற்காப்பு மூலம் : குருதி வடிநீரில் குறிப்பிட்ட தற்காப்பு மூலங்களின் அளவு அதிகமாக இருத்தல்.

hyperimmunoglobulinaemia : மிகைத்தடை காப்புப் புரதங்கள் : குருதி வடிநீரில் தடைகாப்புப் புரதங்களின் அளவுக்கு கணிசமாக அதிகமாக இருத்தல்.

hyperinsulinism : மிகைக்கணைய இயக்கு நீர்ச் சுரப்பு; இன்சுலின் மிகைப்பு : கணையத்தில் அளவுக்கு அதிகமாக இயக்கு நீர் சுரந்து, இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதாலும், இயக்கு நீரை (இன்சுலின்) அளவுக்கு அதிகமாகக் கொடுப்பதாலும்