பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hypnotherapy

553

hypochloraemia


படும் அரிதுயில், வலியற்ற மகப்பேறு, பல்பிடுங்குதல், அரிதாக சிறிய அறுவைச் சிகிச்சை ஆகியவற்றுக்கு இது பயன்படுத்தப்படுகிறது.

hypnotherapy : அரிதுயல் மருத்துவ முறை : மன ஆற்றல் மூலம் நீண்ட உறக்கத்தை அல்லது அரிதுயிலைத் தூண்டிச் சிகிச்சையளித்தல்.

hypnotic : 1, அரிதுயில் மருந்து; உறக்க ஊக்கயிம்; உறக்க மூட்டி; வசியம் : அரிதுயிலைத் தூண்டுகிற மருந்து, 2. அரிதுயிலாளர் : மன ஆற்றலால் தூண்டப்படும் அரிதுயில் நிலைக்கு ஆட்பட்டவர்.

hypnotism : உறக்க மமுடுக்கம்; அறிதுயிலுத்துவம் : புறத்தூண்டு தலின் மீது மட்டுமே செயலாற்றும் இயல்புடைய செயற்கையான அரிதுயில் நிலை.

Hypnovel : ஹிப்னோவல் : மெடா சோலம் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

hypoactivity : செயல்நலிவு : செயல்முறை குறைந்திருத்தல் அல்லது பின்னடைந்திருத்தல்.

hypoadrenocorticism : அண்ணீரகக் குண்டிக்காய் இயக்குநீர் சுரப்புக் குறைவு : அண்ணீரகக் குண்டிக்காய் இயக்குநீர் சுரத்தல் குறைதல். அல்லது அதன் விளைவு.

hypoaesthesia : குன்றுணைச்சி; தாழுணைர்வு : உடலின் ஓர் உறுப்பில் உணர்ச்சி குன்றியிருத்தல்.

hypoalbuminosis : கருப்புரத குறைபாடு : கருப்புரதம் அளவுக்கு மீறிக்குறைவாக இருத்தல்.

hypobaric : சுற்றோட்ட வாயு அழுத்தக் குறைவு : வாயு மண்டல அழுத்தத்தைவிட 1 குறைவாக இருக்கும் சுற்றோட்ட வாயுக்களின் அழுத்தம் தொடர்புடைய.

hypobarism : உடல் அழுத்தக் குறைபாடு : திசு ஆக்சிஜன் இல்லாமல் உடம்பில் பாரமானி அழுத்தம் குறைவதால் உண்டாகும் நிலை.

hypobaropathy : பாரமான அழுத்தக் குறைவு நோய் : பாரமானி அழுத்தம் குறைவதால் உண்டாகும் நோய்.

hypocalcaemia : கால்சியம் குறைபாடு : இரத்தத்தில் கால்சியம் குறைவாக இருத்தல்.

hypocapnia : கரியமில வாயுக் குறைவு : தமனி இரத்தத்தில் கார்பன்டையாக்சைடு (கரிய மில CO,வாயு) குறைவாக இருத்தல்.

hypochloraemia : குளோரைடுக் குறைபாடு : சுற்றோட்ட இரத்தத்தில் குளோரைடுகள் குறைவாக இருத்தல்.