பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hypochlorhydria

554

hypocythaemia


hypochlorhydria : ஹைட்ரோ குளோரிக் அமிலக் குறைபாடு : அமிலக்குறை இரைப்பை நீரில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் குறைவாக இருத்தல்.

hypochlorite : ஹைப்போகுளோரைட் : ஹைப்போகுளோரஸ் அமிலத்தின் வணிகப் பெயர். காயங்களைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

hypochondria : மனவாட்ட நோய்; நோய்மைக் கலக்கம்; நோயெண்ணம் : சூம்படைவுக் கோளாறு, கற்பனைப் பிணி, மெளட்டீக நோய்.

hypochondriac : மனவாட்ட நோயாளி : மெளட்டீக நோயாளி.

hypochondriasis : பீதி நோய்; மனப்பாடு; நோயெண்ணம் : நோய் குணமடைந்துவிடும் என்று மருத்துவ முறையில் உறுதி கூறியபிறகும் ஒருவரிடம் இடைவிடாமல் எரிச்சலூட்டும் பீதி குடிகொண்டிருத்தல்.

hypochondrium : கீழ்விலா எலும்புப் பகுதி; விலாவடி : கீழ் விலா எலும்புகளுக்குக் கீழே உள்ள அடிவயிற்றின் மேல் கிடைமட்டப் பகுதி (இடம், வலம்).

hypocholesteraemia : குருதிக் கொழுப்புக் குறைபாடு : சுற்றோட் டமாகச் செல்லும் குருதியில் கொழுப்புச் சத்து (Cholesterol) கணிசமாகக் குறைந்திருத்தல்.

hypochondroplasia : மிகை ஆட்டோசோமால் : ஆட்டோசோமால் ஆதிக்கம் பெற்றிருக்கும் நிலை. இதனால், குள்ள உருவம், குட்டை உறுப்புகள், வால்வழி உட்குழல் ஆகியவை உண்டாகும்.

hypochromasia : குருதிச் சிவப்பணுக் குறைபாடு : குருதிச் சிவப் பணுக்களில் குருதிச் சிவப்பணுக்கள் குறைவாக இருக்கும் நிலை.

hypochromia : சிவப்பணுக் குறைவு நோய் : 1. சிவப்பணுக் குறைபாடு, 2. குருதிச் சோகையின் ஒரு நிலை. இதில் குருதிச் சிவப்பணுக்கள் இயல்பான அளவை விடக் குறைந்த வீதத்தில் இருக்கும்.

hypochromic : நிறமிக்குறைபாடு : இரத்தச் சிவப்பணுக்களில் செந்நிறக் குருதியணுக்கள் குறைவாக இருப்பதன் காரணமாக வண்ணப் பொருள் அல்லது நிறமி குறைவாக இருத்தல்.

hypocythaemia : குருதி அணுக்கள் குறைபாடு : சுற்றோட்டமாகச் செல்லும் குருதியில் சிவப்பு, வெள்ளணுக்களும், தகட்டணுக்களும், கணிசமான அளவுக் குறைந்திருத்தல். இது புதுத் தசை வளர்ச்சியடையாத சோனக நோய் போன்ற நிலை.