பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hypoderma

555

hypoglycaemia


hypoderma : தோல் கூட்டுப்புழு: தோல் சார்ந்த புழுப் பருவத்திலுள்ள ஒற்றைத் தலைவலி உண்டாகும் குதிரை ஈ வகையைச் சேர்ந்த கூட்டுப் புழு.

hypodermiasis : படர் கொப்புளம் : அடித்தோல் சார்ந்த கூட்டுப்புழுவிலிருந்து தோலில் உண்டாகும் படர் கொப்புளம்.

hypodermic : அடித்தோல்;அடித்தோல் சார் : தோலின் அடிப்பகுதி.

hypoferraemia : குருதி அயக்குறைபாடு : சுற்றோட்டமாகச் செல்லும் குருதியில் அயம் குறைந்த அளவில் இருத்தல்.

hypofertility : இனப்பெருக்கத் திறன் குறைபாடு : இனப்பெருக்கம் செய்வதற்கானதிறன் குறைவாக இருத்தல்.

hypofunction : செயலின்மை; குறை இயக்கம்; தாழ்வினை : செயலியக்கக் குறைபாட்டு நோய்.

hypogastrium : அடியகட்டுப் பகுதி; உந்திக் கீழ்ப்பகுதி : அடி வயிற்றின் அடியகட்டுப் பகுதி.

hypogastrium : உந்திக் கீழ்ப்பகுதி : தொப்புள் குழிக்கும் அடியிலுள்ள அடிவயிற்றின் கீழ் மையப் பகுதி. பொது மண்டலம்.

hypogenesis : உறுப்புக் குறை வளர்ச்சி : உடம்பின் பகுதிகள் அல்லது உறுப்புகள் குறை வளர்ச்சியுடனிருத்தல்.

hypogenitalism : பாலுறுப்பு வளர்ச்சிக் குறைபாடு : புறப்பிறப் புறுப்புகள் பகுதி அல்லது பகுதி முதிரா நிலையில் இருத்தல். இது பொதுவாக, பாலணு உயிரணுக்களை உற்பத்தி செய்யும் உறுப்பு போதிய அளவு வளர்ச்சி பெறாததால் இது உண்டாகிறது.

hypoglassalmenue : நாநரம்பு.

hypophyseal : மூடிச் சுரப்பி; மூளை சரியச் சுரப்பி.

hypoglossal : நாவ்டி நரம்பு : நாவின் அடியிலுள்ள நரம்புப் பகுதி.

hypoglyaemia : கனிமக்குறை.

hypogonadism : குறை செனிப்பியம்.

hypoglycaemia : குருதிக் குளுக்கோஸ் குறைபாடு; குருதிச் சார்க் கரைக் குறை : குருதியில் குளுக்கோஸ் குறைவாக இருத்தல். இதனால், கவலை, மனக்கிளர்ச்சி, ஆழ்ந்த உறக்க நிலை, சன்னி ஆகியவை உண்டாகும். நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் அதிகமாகக் கொடுத்து விட்டால் இந்நிலை ஏற்படலாம்.